states

ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய சட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை

சென்னை, ஜூன் 28- ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது. இந்நிலையில் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 71 பக்க அறிக்கையில், ஆன்லைன் விளை யாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழ கத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களின் உடல் நலம் இந்த விளையாட்டுக்களால் பாதிக்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்திய அரசியல் சாசனம் 252 பயன்படுத்தி மத்திய அரசு தேசிய அளவில் ஒரு  சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கமிட்டி  பரிந்துரை செய்துள்ளது. அதேபோல இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள  வழக்கில் தமிழக அரசு மேல்மறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;