கைது செய்யக்கோரி சிபிஎம், வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரகம் முன்பு போராட்டம்
சேலம், ஜூலை 13- சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை எதிர்த்ததால் ஆத்திரமடைந்த சமூக விரோதக்கும் பல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள் ளது. இதனைக் கண்டித்தும் அக்கும் பலைக் கைது செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கத்தினர் ஆவேச போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற் பனை என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதேபோன்று சந்து கடை களும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு கள் விற்பனைகளும் அதிகரித்து வரு கின்றன. இதனால் இளைஞர்கள், உழைப்பாளி மக்கள் போதைக்கும், சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். இதனை தடுக்க வேண்டும் எனக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர்ந்து போராட் டங்களை முன்னெடுத்து வருகின்ற னர். மேலும், காவல்துறை, மாவட்ட நிர் வாகத்திடமும் இதனை தடுக்க வலி யுறுத்தி மனு அளித்து வருகின்றனர்
சமூக விரோதக் கும்பல் ஆத்திரம்
மக்கள் நலன் சார்ந்த போராட்டங் களை வாலிபர் சங்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருவது, சமூக விரோதக் கும்ப லுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த சேலம் மாநகராட்சி 58ஆவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, அவருடைய கணவர் சதீஷ் மற்றும் அடியாட்களான அருண் உள்ளிட்ட நான்கு பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் பெரியசாமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனையை எதிர்த்து எதற்காக இயக்கம் நடத்துகிறீர்கள், போதைப் பழக்கத்திற்கு எதிரான விஷ யத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென்று இரும்புத்தடி, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பெரிய சாமியை கடுமையாக தாக்கினர். இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், பெரிய சாமியை மீட்டு, சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியரகம் முன்பு மறியல் வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் மீது கொடூர தாக்குதல் நடை பெற்ற சம்பவத்தையறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரும் திர ளாக கூடினர். பின்னர், தாக்குதல் சம்ப வத்தில் தொடர்புடைய கவுன்சிலர் தன லட்சுமி, அவருடைய கணவர் சதீஷ் மற்றும் அடியாட்களான அருண் உள் ளிட்ட நான்கு பேரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலைமுயற்சி வழக்கில் கைது செய்க: சிபிஎம்
சமூக விரோதிகளை கைது செய்ய மறுக்கும் சேலம் மாநகர போலீசார், நியா யம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரத்தில் சட்டம் -ஒழுங்கை சீர்கெடுக்கக்கூடிய போதைப் பழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. எனவே தமிழ்நாடு அரசு, சமூகத்தை சீர ழிக்கும் போதை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்திய சமூக விரோதக் கும்பலான கவுன்சிலர் தனலட்சுமி, சதீஷ், அருண் உள்ளிட்ட நான்கு பேரை உடனடியாக கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா வலியுறுத்தி யுள்ளார்.
மாநிலம் முழுவதும் கண்டனம் முழங்கிடுக!
வாலிபர் சங்க மாநிலக்குழு அழைப்பு
சென்னை, ஜூலை 13- லாட்டரி, கஞ்சா விற்பனைக் கும்ப லால் வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்ப வத்திற்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாநிலக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழு வதும் கண்டன இயக்கம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் கார்த்திக், மாநிலச் செய லாளர் சிங்காரவேலு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: லாட்டரி சீட்டு விற்பனைக்கும்ப லால் சேலம் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்தச் சம்பவங்கள் தொடர்கதையாகி விடக்கூடாது. இப்படியான நேரங்களில் தமிழ் நாடு அரசும், காவல்துறையும் கடுமை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்களில் ஈடு படும் சமூக விரோதிகள் மீது போதைப் பொருள் விற்பனை தடுப்புச் சட் டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இவையெல்லாம் தமிழ் நாட்டில் போதைப்பொருள் விற் பனை செய்யும் சமூக விரோத கும் பல்கள் எவ்வளவு தீவிரமாக இயங்கு கின்றன என்பதற்கான எடுத்துக் காட்டுகள் என்பதை காவல்துறை உணர வேண்டும். சேலம் சம்பவத்தில் சம்பந்தப் பட்ட சமூக விரோதிகள் குற்றவாளி கள் சதீஷ், அருண் உள்ளிட்ட நான்கு நபர்களையும் உடனடியாக போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும். இந்த கொடூரத் தாக்குதலை கண் டித்து தமிழ்நாடு முழுவதும் உடனடி யாக கண்டன இயக்கங்களை நடத்தி டுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
சிபிஎம் மாநிலச் செயற்குழு கடும் கண்டனம்
சென்னை, ஜூலை 13- சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்திய வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மீது சமூக விரோதக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை எதிர்த்துப் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமியை ஜூலை 13 அன்று காலையில் சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த ரௌடிகள் கத்தி, கம்பி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமுற்ற பெரியசாமி கொடுங்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக விரோதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர்களில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், இக்கும்ப லுக்கு தலைவனாகவும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து வரும் சதீஷ் என்பவர் இன்னும் கைது செய்யப்பட வில்லை. இது கண்டனத்திற்குரியது. சமூக விரோதக் கும்பல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் திருச்சி யில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது சமூக விரோதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் கண்டனம் முழங்கிடுக! எனவே, இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்திய லாட்டரி சீட்டு விற்பனையாளர் சதீஷ் என்பவரை உடனடியாக சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்திட வேண்டுமெனவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டுமெனவும், படு காயமுற்ற பெரியசாமிக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. இந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டனம் முழங்கிட வேண்டுமென கட்சி அணிகளை கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.