states

img

தீண்டாமை கொடுமை புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி யின் சார்பாக நெடுங்காடு தொகுதி யில் 2ஆவது முறை யாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 31 வய தான சந்திர பிரியங்கா வுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி  வழங்கப்பட்டது. ஆதி  திராவிட நலத்துறை, வீட்டு வசதி, தொழிலா ளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளையும் கூடுதலாக கவ னித்து வந்த சந்திர பிரியங்கா, திடீ ரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செவ்வா யன்று அறிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூ கத்தில் இருந்தும் பெண்களும் அரசி யலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்  திக்க நேரிடும் என பொதுவாக கூறு வார்கள். ஆனால், கடின உழைப்பும், மன  தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவ லைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்ப தற்கான பல முன் உதாரணங்கள் வர லாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தி மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வருகிறேன். ஆனால் சூழ்ச்சி அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்ச ராக நீடிக்க முடியாது. தனது தொகுதி மக்க ளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வும் உருக்கத்துடன் அறிக்கையில் தெரி வித்துள்ளார்.