பிரதமரின் பொருளாதார ஆலோசகர் விவேக் தேப்ராய் சொல்கிறார்
ஜிஎஸ்டி வரி விலக்கால் ஜிடிபி வருவாய் பாதிக்கிறதாம்!
புதுதில்லி, நவ.9- ஜிஎஸ்டி-யில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிப் பதால், உள்நாட்டு உற்பத்தி (GDP) வருவாய் 5.5 சதவிகிதம் அளவிற்கு பாதிக்கப்படுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக்குழுத் தலைவர் விவேக் தேப்ராப் ‘கவலை’ தெரிவித் துள்ளார். இவ்வாறு வரி விலக்கு அளிப்பதுதான் நாட்டின் முன் னேற்றத்திற்கே தடை என்பது போல அவர் பேசியுள்ளார். தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன் றில் அவர் மேலும் பேசியிருப்பதா வது: ‘‘ஒன்றிய - மாநில அரசு களின் மொத்த ஜிஎஸ்டி வரு வாயானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் 15 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. அதேவேளையில், கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கான அரசின் செல வினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரக்கு - சேவை வரியானது அனைத்து பொருட்களுக்கும் ஒரே விகிதமாக அமல்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல், எந்தப் பொருட்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்கு காரணமாக ஜிடிபி-யில் 5 முதல் 5.5 சதவிகிதம் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வரி விலக்குகள் பல்வேறு சிக் கல்களை ஏற்படுத்துகின்றன. விலக்குகள் ஏதுமற்ற வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்து வது தொடர்பாக சிந்திக்க வேண்டும். பல அங்கீகரிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் தனிநபர் வருமானப் பிரிவில் வரியைச் செலுத்தி வருகின்றன. எனவே, தனிநபர் வருமான வரிக்கும் பெருநிறுவன வரிக்கும் இடையி லான செயற்கை வேறுபாடு களையப்பட வேண்டும். இது நிர்வாகச் சிக்கல்களைக் குறைக் கும். இவையனைத்தும் தனிப் பட்ட கருத்து மட்டுமே. இதை பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரையாகக் கரு தக் கூடாது. ஆனால், நாட்டில் ஒரே ஜிஎஸ்டி விகிதம் எப்போதுமே அமலாகாது என்றே நினைக்கி றேன்.’’ இவ்வாறு விவேக் தேப்ராய் பேசியுள்ளார்.
‘நிதி ஆயோக்’ சிஇஓ அமிதாப் கந்த் பேச்சு!
புதுதில்லி, நவ.9- இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால், ஒரு அம்பானி, அதானி போதாது... இன்னும் 10 ஆயிரம் அம்பானி, 20 ஆயிரம் அதானிகள் உருவாக வேண்டும் என்று ‘நிதி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரியும், ‘ஜி20’ மாநாட் டின் தலைவருமான அமிதாப் கந்த் பேசியுள்ளார். ‘ஜி20’ அமைப்பு கடந்த 1999-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந் தியா, கனடா, துருக்கி, தென் ஆப் பிரிக்கா, சவூதி அரேபியா, தென் கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ள நிலையில், டிசம்பர் 1 முதல் ‘ஜி20’ அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதை யொட்டி நடைபெறும் மாநாட் டிற்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை பிர தமர் மோடி செவ்வாயன்று வெளி யிட்டார்.
தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த லோகோவை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “ஜி20 இலச் சினை என்பது வெறும் இலச்சினை அல்ல; இது ஒரு செய்தி, இந்தியா வின் நரம்புகளில் ஓடும் உணர்வு” என்றார். இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிப்பதாகவும் தெரிவித்தார். இதுஒருபுறமிருக்க, ‘ஜி20’ மாநாட்டின் தலைவராக நிய மிக்கப்பட்டுள்ள ‘நிதி ஆயோக்’ கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தொழில்துறை யினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது, “10,000 அம்பானிகளும், 20,000 அதானிகளும் இருந்தால் மட்டுமே இந்தியா வளரும். எனவே உங்கள் துறையில் தொடர்ந்து முக்கியத்து வம் பெற ‘ஜி20’ வாய்ப்பை நீங்கள் (முதலாளிகள்) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். “’ஜி20’ தலைவர் பதவியை வைத்திருப்பது வணி கங்களில் ஈடுபட ஒரு மிகப்பெரிய வாய்ப்பு; இது உங்களுக்கு இனி ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு” என்றும் உசுப்பேற்றியுள்ளார்.
மேலும், “உலகளாவிய விநி யோகச் சங்கிலியில் குறிப்பிடத் தக்க பங்கை வகிக்க இது ஒரு வாய்ப்பு. உலகத் தலைவர்களால் கொள்கைகள் அமைக்கப்படு கின்றன. நமது கட்டமைப்பு உல கத் தலைவர்களால் கட்டமைக் கப்பட்டுள்ளது. நாடு ஒரு சிறந்த உற்பத்தி சக்தியாக மாற வேண்டு மானால் வணிகங்கள் விரிவ டைந்து செழிக்க வேண்டும். நீங் கள் (முதலாளிகள்) வளர்ச்சியடை யாமல் இந்தியா வளர்ச்சி அடை யாது. 30 முதல் 40 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டுமானால், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 9 முதல் 10 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் இருக்க வேண்டும். இது நாட்டின் முன்பு இருக்கும் சவால். தனியார் துறையை விரிவுபடுத்தா மல் இவை அனைத்தையும் சாத்தி யப்படுத்துவது அரசால் மட்டும் முடியாது. ‘ஜி20’ என்பது அர சாங்கங்களை விட அதிகம் என் பதை நாம் புரிந்து கொள்ள வேண் டும். நீங்கள் (முதலாளிகள்) வளர்ச்சியடைந்து செழிக்காத வரை இந்தியா முன்னேறாது. சிறு- குறு- நடுத்தர நிறுவனங்கள் பெரிய நிறுவனமாக வளராத வரை, பெரிய நிறுவனம் அதனை விட பெரியதாக வளர்ச்சியடை யாத வரை இந்தியா வளர்ச்சி யடையாது” என அமிதாப் கந்த், முதலாளிகளை தாங்கு தாங்கு வென்று தாங்கியுள்ளார்.