states

ஊதியப் பிரச்சனை தீர்க்காவிடில் மாநிலம் தழுவிய போராட்டம்

சென்னை, பிப். 8- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை உடனடி யாக வழங்காவிட்டால் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசி ரியர்கள் மற்றும் பணியாளர்களில் 30  விழுக்காடு பேர் ஜனவரிமாத ஊதியத்தை இதுவரை பெறவில்லை.   பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறை, நிதித்துறை, கருவூலக் கணக்குத்  துறை ஆகியவை இணைந்து போர்க் கால அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடி யாக ஊதியம் கிடைத்திட துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் முன்பணம் வழங்குவதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பிரச்சனைகள் ஏற்படாதவாறு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு உதவிபெறும் பள்ளி  ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக் காக மாநிலம் முழுவதும் போராட்டத் தில் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;