சென்னை, செப். 1 - யூடியூப் சேனல்கள் மீதான தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரா னது என்றும், அந்த உத்தரவை உயர்நீதி மன்றம் திரும்பப் பெற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள் ளது. 13 யூடியூப் சேனல் கள் இணைந்து வெளி யிட்டுள்ள கூட்டறிக்கை யின் சுருக்கம் வருமாறு: கள்ளக்குறிச்சி கனி யாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. அதை மாணவியின் பெற்றோர்கள் மறுக் கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பல உண் மைகளை டிஜிட்டல் ஊட கங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.சுரேஷ்குமார், மாணவி மரணம் தொடர்பாக ‘இணை விசாரணை’ நடத்தும் சமூக வலை தளங்கள் மீது நடவ டிக்கை எடுக்கவும், யூடியூப் சேனல்களை முடக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட் டுள்ளார். ‘இணை விசா ரணை’ என்ற வார்த் தையே ஆபத்தானது. அரசும் அதிகார வர்க்கமும் மறைக்க நினைக்கும் உண்மை களை மக்களிடம் கொண்டு செல்வதே பத்திரிகையாளர்களின் கடமை. அதை தடுக் கும், அச்சுறுத்தும் வகை யில் நீதிமன்ற உத்த ரவு உள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப் படையில் பேசக்கூடாது, பேசினால் நடவடிக்கை என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது. உயர் நீதி மன்றத்தின் உத்தரவு தவறான முன்னுதார ணம். எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெற தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.