நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வேளாங்கண்ணி பேரூராட்சி செபஸ்தியார் நகர் பகுதியில், நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் புதிய பகுதிநேர அங்காடி கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் டபிள்யூ.ஜான் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார்.