states

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து..

ஓ லா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் வாடகை வாகனங்களை இயக்கும் தொழிலாளர்களின் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மிகவும் நியாயமானது.  வாடகை வாகனங்களை சுரண்டும் போக்கைத் தடுத்து ஓலா, ஊபர் போன்ற செயலிகளை தமிழக அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். நியாயமான கட்டண நிர்ணயம், விபத்துக் காப்பீடு மற்றும் வாடகை அல்லாத வாகனங்களை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நியாயமான கட்டணம் கொண்ட செயலியை செயல்படுத்திட அரசே முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.