states

தீக்கதிர் விரைவு செய்திகள்

காலாவதியான சட்டங்கள்

சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ  வேண்டும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி விரும்புகிறார். தேவையற்ற சட்  டங்கள் சாமானியர்களுக்கு சுமையாக இருப்பதால் குறைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே 1500-க்கும் மேற்பட்ட சட்டங்களை நீக்கியுள்ளோம். இன்  றைய காலகட்டத்தில் எந்தப் பொருத்த மும் இல்லாமல் விளங்கும் சில காலா வதியான மற்றும் பழமையான சட்டங் கள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்துள்ளோம்” என்று ஒன்றிய அர சின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் 3-ஆவது பட்டியல்

இமாசலப் பிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நவம்பர் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக் கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாள். இந்நிலையில், ஏற்கெனவே 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறி வித்திருந்த காங்கிரஸ், 4 வேட்பா ளர்கள் அடங்கிய மூன்றாவது கட்ட  வேட்பாளர் பட்டியலை சனிக்கிழமை யன்று வெளியிட்டது. கின்னவுர்-எஸ்டி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ஜகத் சிங் நேகி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜெய்சிங்பூர் - எஸ்சி தொகுதியில் யாத்விந்தர் கோமா நிறுத்தப்பட்டுள்ளார்.

உ.பி. என்கவுண்ட்டர் 166

உத்தரப் பிரதேசத்தில் என்கவுண்ட்  டர்கள் மூலம் 166 குற்றவாளிகள்  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள தாக உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் மகிழ்ச்சி தெரிவித்துள் ளார்.  அப்போது நாட்டின் பாதுகாப் பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணு வம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது.  கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிர தேச காவல்துறையினர் நடத்திய என் கவுண்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 453 பேர் காயமடைந்துள்ளனர்” என்று  புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது நிலவுத்திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க முடிவு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு  செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூன்  மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அகில இந்திய வானொலி நிலையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.   2024ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண் வெளிக்கு அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக, அது மேலும் தெரி வித்தது. கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பினால், மூன்றாவது நிலவு திட்டமான சந்திரயான்-3 இன் முன்னேற்றம் தடை பட்டதாக, விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். 

ரஷ்ய  அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷொய்கு வெள்ளியன்று  அமெரிக்க  பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினுடன் தொலைபேசி மூலம் உக்ரைன் நிலைமை உள்ளிட்ட சூடான சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். இதில் ரஷ்ய-உக்ரைனிய மோதலின் போது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் தடையில்லாத பரி மாற்றத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை ஆஸ்டின் வலி யுறுத்தினார் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. அன்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் லெஸ்னி கோவுடனும் ஆஸ்டின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

நடைபயணத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநி லம் யெர்ரகெரா பகுதியில் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இதில், ராய்ச்சூரு மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கம் சார்பில், முன்னாள்  ராணுவ வீரர்கள், இந்திய தேசியக் கொடியுடன் நடைபய ணத்தில் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ வீரர்களு டன் சிறு ஓட்டம் மேற்கொண்ட ராகுல், அதனை டுவிட்டரில் பகிர்ந்து, ‘இந்திய நாட்டின் பாதுகாப்புக் கேடயம் மற்றும் பெருமை’ என்று பதிவிட்டுள்ளார்.

நளினிக்கு மேலும் பரோல் நீட்டிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்  டனை அனுபவித்து வரும் நளினி-க்கு கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. தன்னு டைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நளினிக்கு 10-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு

ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை ரூ. 10-இல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்து மேற்கு மண்  டல ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் நிலை யங்களில் கூடும் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், இவ்வாறு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மும்பை மண்டலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களி லும் நடைமேடைக் கட்டணம் ரூ. 10-இல் இருந்து 50 ரூபா யாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோ பர் 31 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை எய்ம்ஸ்  தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன்

மதுரை, அக்.22- கடந்த 2019-ஆம் மதுரை மாவட்டம் தோப்பூரில் ஒன்றிய  அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டி னார். ஆனால் தற்போது வரையிலும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.  2015- ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனைக்கு அறிவிப்பு வெளியாகி ஏழு ஆண்டு களாகியும்  ஒன்றிய அரசின் தொடர் துரோகத்தால் எந்த முன்  னேற்றமும் இல்லை. மோடி வைத்த ஒற்றை செங்கலும் கூட மாயமாகிவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கூடுதல் செலவினங்களுக்கு இது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்தாலே எய்ம்ஸ் பணிகள் தொடங்கும். அமைச்சரவை ஒப்புதல் அளித்தாலும் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டு, டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்க குறைந்தது ஆறு மாதங்களாகும். இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பும் கூட மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பினர்களின் தொடர் வற்புறுத்தலால் தான் வெளியாகியுள்ளது.

பேருந்து-லாரி மோதல்; 15 பேர் பலி

ரேவா, அக்.22- மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி   மலை அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும், அதேபகுதி யில் எதிரே வந்த லாரியும் வெள்ளிக்கிழமை இரவு 11.30  மணியளவில்நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.  காயமடைந்தவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிட மாக உள்ளது. இந்தப்பேருந்து ஐதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்தில் எண்பது பேர் பய ணம் செய்துள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் பெரும் பாலோர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு பய ணித்தவர்கள் ஆவர். காயமடைந்த 40 பேரில் 20 பேர் பிரயாக்ராஜ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  லேசான காயம டைந்த பயணிகள் சிகிச்சைக்குப் பிறகு  இரண்டு பேருந்து களில் பிரயாக்ராஜூக்கு அனுப்பப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

8 விழுக்காடு அகவிலைப்படி:  தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

சென்னை,அக்.22-  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தேர்தலில் கு.வெங்கடேசன் தலை மையிலான அகரம் அணி வெற்றி பெற்றது. தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இந்த நிலையில் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள உயர்த்தப்பட்ட 4 விழுக்காடு அக விலைப்படியையும் சேர்த்து கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 38 விழுக்காடு அகவிலைப்படியை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் நிலையில் பணியமர்த்துவதை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

20 மாநகராட்சிகளில் புதியதாக 3,417  பணியிடங்கள்

சென்னை,அக்.22- தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளில் (சென்னை நீங்கலாக ) மக்கள் தொகைக் கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு ஆகிய 4 பிரிவுகளாக இயங்கி வரும் நிலையில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஒசூர், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் போதுமான பணி யிடங்கள் இல்லை என புகார் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

க்யூஆர் கோடு மூலம் ரயில் டிக்கெட்  

சென்னை, அக்.22- க்யூஆர் கோடு மூலம் ரயில் நிலை யத்திற்கு உள்ளே இருந்து கொண்டே முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் பெரும் வசதியை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிமுகம்  செய்துள்ளது. புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட், மெயில், விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை பொதுமக்கள் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயலியில் ஜியோ பென்சிங் அனுமதி உள்ளதால் ரயில் நிலையம் அல்லது தண்டவாளங்களுக்கு அருகில் நின்று இந்த செயலியின் மூலம் டிக்கெட் பெற முடியாத நிலை இருந்தது. தண்டவாளம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தான் டிக்கெட்டு பதிவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது அந்தநிலை மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட  ரயில் நிலையங்களில் ரயில் நிலை யத்திற்கு உள்ளே இருந்து டிக்கெட்டு பெறலாம் என்று தெற்கு  ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது. யூடிஎஸ் செயலியை பதவிறக்கம் செய்து ரயில் நிலையத்தில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய  வேண்டும். இதன்பிறகு சென்று சேரும் இடத்தை பதிவிட்டு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

ஒரு வேளை உணவைத் தவிர்க்கும் பிரிட்டன் மக்கள் : நெருக்கடியால் அவதி

லண்டன், அக்.22- கடுமையான விலையேற்றத்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் ஏற் பட்டுள்ள தட்டுப்பாட்டாலும் ஒரு வேளை உண வையே பிரிட்டன் மக்கள் தவிர்த்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறுகையில், பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கிய லிஸ் டிரஸ் 45 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தார். இந்தக் குறைவான நாட்களிலும் அர சுத்துறைகள் மீது கைவைப்பதில் நிதியமைச்சர் பெரும் ஆர்வத்தைக்காட்டினார். சாதாரண மக்கள் மீதான வரிகளை அதிகரிப்பதில் முனைப்பு இருந்தது. லிஸ் டிரஸ் பதவி விலகியதால் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப் பட்டாலும், அடுத்து வருபவர் யாராக இருந்தா லும் பொதுத்துறையை சூறையாடி விடுவார் கள் என்று தொழிலாளர் கட்சி கருத்து தெரிவித்துள் ளது. இந்நிலையில்தான் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்ச மும் மக்களை வாட்டி வருகிறது. எரிபொருளுக் கான விலையை ஏற விடாமல் இரண்டு ஆண்டுக ளுக்கு விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தைப் புதிய நிதியமைச்சர் கிடப்பில் போட்டு விட்டார். புதிய பொருளாதாரக் கொள்ளை அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கனம் என்ற  பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இயற்கை எரிவாயு விலையின் உச்சவரம்பு உடன்பாட்டுக்கு வரவில்லை

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு இரு நாட்கள் நடைபெற்று 21ஆம் நாள் பிரசல்ஸில் நிறைவடைந்தது. நீண்ட நேர கலந்தாய்வு மேற்கொண்டாலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இயற்கை எரிவாயு விலையின் உச்சவரம்பு பற்றி உடன்பாட்டை எட்ட முடியவில்லை. இம்மாநாட்டுக்குப் பின் வெளியான அறிக் கையில், தற்போதைய எரிசக்தி நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு, அதன் தேவை யைத் தொடர்ந்து குறைக்க முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்றும் முழு ஐரோப்பிய ஒன்றியச் சந்தையிலும் எரிசக்தி விலையைக் குறைத்து, தனிச் சந்தையின் முழுமைத் தன்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எரிசக்தி துறை கட்டமைப்பில் கடும் வேறு பாடுகள் நிலவியதால், கடந்த சில மாதங்க ளில் எரிசக்தி நெருக்கடியை எப்படி சமா ளிப்பது என்பது பற்றி பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் தகராறு நீங்கா மல் இருந்து வருகின்றது.