states

புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை முற்றிலும் திரும்பப்பெறக்கோரி ஜூன் 22-ல் பெருந்திரள் தர்ணா

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

சென்னை, மே 31-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் சாமி.நடராஜன்,   பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து  சட்டமன்றத்தில் எவ்வித விவாதம் இல்லாமல் தமிழ்நாடு அரசு நிறை வேற்றியுள்ளது. இதில் மிக முக்கிய மான சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கி ணைப்பு சட்டம் 2023. இந்த சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங் களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள  நிலங்களில் இருக்கும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உட்பட தனி யாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழி வகை செய்கிறது. நிலம் கையகப் படுத்துவதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில், அந்த சட்ட ங்களில்  குறிப்பிட்டுள்ளபடி, புதிய திட்டங் களுக்கு விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும் போது நியாயமான சட்டப்படியான இழப்பீட்டை பெறு வதற்கே விவசாயிகள் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங் கிணைப்பு சட்டம் எந்த வகையிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயி களின் உயிர்நாடியாக உள்ள நிலங் களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடவும் உதவாது. மாறாக, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் இந்த சட்டம் பயன்படும் என்பதை தமிழ்நாடு அரசு  உணர வேண்டும். இச்சட்டத்தை திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் 17.05.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பா ட்டம் நடத்தினோம். தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள், நீரியியல் நிபுணர்கள் இச்சட்டத்தை திரும்பப்பெற வேண் டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளி யிடாமல் இருப்பது சரியான அணுகு முறையாக தெரியவில்லை.  எனவே, இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம்  நடத்துவது, எதிர்வரும் 22.06.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு  கொண்டு வந்துள்ள நில ஒருங்கி ணைப்பு சட்டத்தை முற்றிலும் திரும் பப்பெற வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா நடத்துவது என முடி வெடுத்துள்ளது. எனவே, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும், பொது நல அமைப்புகளும், நீரியியல் ஆர்வலர் களும் இதில் பங்கேற்று ஆதரவு அளித்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

;