states

பணி மாறுதலில் சென்றவர் துணை ஆணையர் என அறிவிப்பு: அரசிதழால் குழப்பம்

சென்னை,நவ.24- தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இதற்காக அமைக்கப்படும் குழுவில் தொழிலாளர் நலத்  துறை, அரசு மற்றும் தொழிற் சங்கங்களை சேர்ந்த  பிரதிநிதிகள் இடம்பெறு வார்கள். இதன்படி, தமிழ்நாடு  அரசு உள்ளாட்சி அமைப்புக ளில் பணிபுரியும் தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு அமைத்து கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் சார்பில் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக் குநர், நகராட்சி நிர்வாகத் துறை துணை இயக்குநர், பேரூ ராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில், சென்னை  மாநகராட்சி துணை ஆணை யர் என்ற பிரிவில் 6 மாதங்க ளுக்கு முன்பு பணியிட மாற்றம்  செய்யப்பட்ட அதிகாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக இருந்த  மணீஷ் கடந்த ஜூன் மாதம்  பணியிட மாற்றம் செய்யப்பட் டார். அவருக்கு மாற்றாக சங்கர் லால் குமாவத் சென்னை  மாநகராட்சி சுகாதாரத் துறை  துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 6 மாதங்க ளுக்கு முன்பு பணியிட மாற்றம்  செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகா ரியை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.