கோழிக்கோடு, செப். 19 - கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஆட் கொல்லியான நிபா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித் தது. நிபாவால் பாதிக்கப் பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்களின் பட்டியலில் 1,233 பேர் உள்ள நிலையில், அவர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு, மகாராஷ்டிரா மாநி லம் புனேவுக்கு மாதிரி அனுப் பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகிவரும் நிலையில், கடந்த 4 நாட் களாக நிபா வைரஸ் தொற்று எதுவும் பதிவாகாததால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோழிக் கோடு மாவட்ட ஆட்சியர் கீதா வெளியிட்ட அறிவிப்பில், “கோழிக்கோடு மாவட்டத்தின் 9 பஞ்சாயத்துகளின் கட்டுப் பாட்டு மண்டலங்களில் தளர் வுகள் அறிவிக்கப்பட்டுள் ளன. மேலும் மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்பட வும், இரவு 8 மணி வரை கடைகள் மற்றும் நிறுவனங் கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக் கவசம், சானிடைசர்கள் பயன் படுத்தவும், சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வும், கூட்டங்களைத் தவி ர்க்க வேண்டும் எனவும் மற்ற கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.