தலின், ஜூலை 15- பால்டிக் நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் புதிய அமைச்சரவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் பிரதமரான காஜா கல்லாஸ் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். புதிய கட்சிகளை இணைத்து, அக்கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். இதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும் கூட்டவிருக்கிறார்கள். மீண்டும் அமைச்சரவை அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை காஜா கல்லாஸ் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கட்சியான இசாமா மற்றும் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பான்மை நிரூபிப்பதில் எந்தவித நெருக்கடியும் இருக்கப் போவதில்லை.