சென்னை, ஜூலை 23- நீட் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. இந்த மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது உள்ளிட்ட பதில் களை ஒன்றிய அரசுக்கு வழங்க இருக்கி றோம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:- நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவ தற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு ஆளுநர் மூலம் ஒன்றிய உள் துறை அமைச்சகத்திற்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதா வில் எழுத்துப்பூர்வமாக சில விளக்கங் களை ஒன்றிய அரசு கேட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நீட் தேர்விலி ருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா குடும்ப நலத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள் ளது. அந்த அலுவலர்களின் குறிப்புகளு டன் ஆளுநர் அலுவலகத் தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி தமிழக சட்டத்துறைக்கு கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவில் எழுப் பப்பட்ட ஆறு கேள்விகளுக்கும் சட்டத் துறை வல்லுனர்கள் மூலம் பதில்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படு கின்றனர். நீதிமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறு வதற்கான சட்ட மசோதாவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாநில தேர்வு துறையில் நடத்தப்படும் தேர்வின் மூலம் 12 ஆம் வகுப்பு வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்ப டையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத் தப்படுவதால் அதுவே தகுதியாக எடுத்துக் கொள்ளலாம். தேசிய கல்விக் கொள்கை பன்முகத் தன்மைக்கு எதிரானதாக உள்ளது. கூட் டாட்சித் தத்துவம் அரசமைப்பின் அடிப் படை கட்டமைப்பின் ஒருபகுதி என நீதி மன்றங்கள் தெரிவித்துள்ளன. தேசிய கல்விக்கொள்கை, மாநில சட்டப்பேரவைக்கு வழிகாட்டும் காரணி யாக இருக்க முடியாது. மாநில சட்டப் பேரவைக்கு உயர் கல்வி குறித்து சட்டம் இயற்ற முழு அதிகாரம் உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தி உள் ளது. மாநில அரசின் மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சமமான, நியாய மான வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் நாட்டின் இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது உள்ளிட்ட பதில்களை ஒன் றிய அரசிற்கு அளிக்க உள்ளோம். அதற் கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தமி ழக சட்ட அமைச்சகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களில் அனுப்பி வைக்கப் படும். அவர்கள் அதனை சரிபார்த்த பின்னர் ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவில் எழுந்துள்ள கேள்விகளுக்கு பதில் அளிக் கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட நீட் தேர்வு சட்ட மசோதா ஒப்புதல் அளிக்க முடியாதென குடியரசு தலைவர் மாளிகையால் திருப்பி அனுப் பப்பட்டது. ஆனால் தற்பொழுது நிறை வேற்றி அனுப்பி உள்ள மசோதாவில் விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. இதுவே சற்று முன்னேற்றமான செயலா கவே கருதுகிறோம்.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு படிப்படியாக முத லமைச்சர் காய் நகர்த்தி வெற்றி பெறு வார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள குடியரசுத் தலைவர் அடித்தட்டு மக்க ளில் இருந்து வந்துள்ளதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் என நம்பு வதாக தெரிவித்தார்.