மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி விசாலாட்சி தோட்டம் கிளைச் செயலாளர் ஆர்.ரமேஷ்-மோகனா தம்பதியின் மகள் ஆர்.அக்ஷயா, ஏ.பழனி-பத்மா தம்பதியின் மகன் ஏ.பி.நவீன்ராஜ் ஆகியோரது திருமண வரவேற்பு விழா குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் மணமக்கள் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், பகுதிச் செயலாளர்கள் ஐ.ஆர்.ரவி (மயிலாப்பூர்), எம்.சி.பிரபாகரன் (பல்லாவரம்), கே.உமாபதி (வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்) ஆகியோர் உடனிருந்தனர்.