states

ஆளுநரின் நிலைபாட்டை முஸ்லிம் லீக் ஆதரிக்காது: பி.கே.குஞ்ஞாலிக்குட்டி

பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநரின் நிலைபாட்டை முஸ்லிம் லீக் ஆதரிக்காது என்று பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறினார். பல்கலைக்கழக விவகாரத்தில் கருத்து வேறு பாடு இருந்தால் அதை வெளிப்படுத்தும் வழிமுறை  உள்ளது. சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும்  யுடிஎப் அதை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போதைய ஆட்சி முறையை பலவீனப்படுத்திய ஆளுநர் பதவியை லீக் ஆதரிக்காது என்றும் குஞ்ஞாலிக்குட்டி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும், கேபி சிசி தலைவர் கே.சுதாகரனும் ஆளுநரின் நிலை  பாட்டை ஆதரித்து வரும் சூழலில் குஞ்ஞாலிக் குட்டி தனது வலுவான நிலைபாட்டை அறிவித் துள்ளது குறிப்பிடத்தக்கது.