states

மோடியின் மத வெறுப்புப் பேச்சுக்கு முஸ்லிம் லீக் கண்டனம்

திருச்சி, ஏப். 23 - இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின்  மத வெறுப்பு பேச்சுக்கு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஏப்ரல் 23 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர்  மற்றும் பஞ்சுவாரா ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம்  செய்துள்ள பிரதமர் மோடியின்  ‘பேச்சு’ பெரியதொரு ‘ஏச்சாகவும்,  பொய் மூட்டையை அவிழ்த்துவிட்ட பிதற்றும் வாய் வீச்சாகவும் இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டி கடும் கண்டனக் கணை களையும் வீசிவருகின்றன.  பிரதமர் பேச்சில், இந்திய முஸ்லிம்கள் “பிள்ளை குட்டி களைப் பெற்றுத் தரும் எந்திரங்கள் என்பது போன்ற வெறுப்பைக் கக்கி இருக்கிறார். நாட்டில் எடுத்து வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், தேசம் முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், முஸ்லிம்களின் மக்கள் தொகை, இந்துமக்களின் தொகையைப் போலவே இருக்கிறது என்பதையும், பொதுவாக, எல்லா மக்கள் மத்தி யிலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கிறது என்றும், இன்னும், சில ஆண்டு களுக்குப் பிறகு, இந்தியா முதி யவர்களின் நாடு என்றாகிவிடும் என்ற  அச்சமும் நிலவுகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெளிவாக்கி வருகின்றன. உண்மையை மறைத்து, பொய்பந்தல் போட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர், உண்மையில் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து வருகிறார் என்பதே இதற்கு விளக்க மாகிறது.  பிரதமரின் ஒவ்வொரு நடவடிக்கை யும், அவரின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத் திற்கு உரமூட்டுவதாகவே இருந்து வந்திருக்கிறது.  இல்லாததையும், பொல்லாததை யும் நாகூசாமல் கூறி, நாட்டு மக்களை ஏமாற்றி, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் மோடிக்கு , 18 ஆவது  நாடாளுமன்றத் தேர்தலில் தேசத்து மக்கள் நல்லதொரு பாடம் கற்பிப் பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;