சென்னை,மே 9- சட்டப்பேரவை கூட்டத் தொடர் புதன்கிழமை முடிவ டைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப் பயண விவரங்கள் தயாரிக் கப்பட உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 1 ஆண்டு நிறைவு பெற்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தால் மீண்டும் வெளிநாடுக ளுக்கு சென்று தமிழகத் துக்கு தொழில் முதலீடு களை ஈர்த்து வர திட்ட மிட்டுள்ளார். இதற்காக அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் செல்ல முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற் கான பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்திப் பார் என்றும், அதன்பிறகு ஜூலை மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் வகையில் அவரது சுற்றுப் பயணம் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.