சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டி மக்களின் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில்,“அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால், 47 முதல் 50 ஆயிரம் டன் வரை மட்டுமே வருகின்றன. வெளிநாடுகளில் நிலக்கரி விலை உயர்ந்துள் ளது. எனவே, ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு, 4.80 லட்சம் டன் நிலக்கரி பெற டெண்டர் கோரப் பட்டது. அதில் பங்கேற்ற 4 நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, விரைவில் அந்த நிலக்கரியை பெற்று உற்பத்தி க்கு பயன்படுத்த உள்ளேnம்” என்றார்.