தொடுபுழா, செப்.18- எம்.ஜி.பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடைபெறும் 27 கல்லூரி களில் 19 இல் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், ஒன்பது இடங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளது. அரசு கல்லூரி கட்டப்பனா, ஐஎச்ஆர்டி முட்டம், செயின்ட் ஜோசப் அகாடமி முட்டம், எஸ்எஸ்எம் கல்லூரி ராஜாக்காடு, ஐஎச்ஆர்டி குட்டிகானம், என்எஸ்எஸ் கல்லூரி ராஜகுமாரி, ஜவஹர்லால் நேரு கல்லூரி ஹாங்கு பாலம், எஸ்என் டிரஸ்ட் பாம்பனார், எஸ்என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பீர்மேடு, பிஎட் கல்லூரி குமுளி ஆகியவற்றில் போட்டியின்றி எஸ்எப்ஐ தேர்வு செய்யப்பட்டது. நியூமேன் கல்லூரி தொடுபுழா, அல் அஸ்ஹர் கலைக் கல்லூரி பெரும்பள்ளிச்சிரா, அல் அஸ்ஹர் சட்டக் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி மூலமற்றம், அரசு கல்லூரி மூணாறு, அரசு கல்லூரி சாந்தன் பாறை, எம். பி. கல்லூரி அடிமாலி, ஹோலிகிராஸ் புட்டடி ஆகியவற்றில் பெரும்பாலான இடங்களை போட்டி யின்றி எஸ்எப்ஐ கைப்பற்றியது.