states

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மேட்டூர்: காவிரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

சேலம், ஜூன் 10-   காவிரி நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் மேட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் முருகேசன். சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இவரது தம்பி பெரியசாமி, இவரது மகள் பவித்ரா  (10), முருகேசன் மகள் காமாட்சி (8) இருவரும் பள்ளி  விடுமுறைக்கு சேத்துக் குழியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.  இந்த நிலையில், வெள்ளியன்று காலை கிராமத்தில் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்கும், துணி துவைப்ப தற்கும் பாட்டியுடன் இரண்டு சிறுமிகளும் சென்றனர். அங்கு எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ற தால் நீரில் மூழ்கினர். உடனே பாட்டி பாப்பாத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் சென்று குழந்தைகளை மீட்டனர். ஆனால், தண்ணீரிலேயே மூச்சடைத்து இரண்டு குழந்தை களுமே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் இரண்டு சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். 2 பள்ளி சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொப்பரை தேங்காய் கொள்முதல்

நாமக்கல், ஜூன் 10- விவசாயிகளின் விளைப்பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரை தேங்காயை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள் ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொப்பரை கொள்முதல் இலக்காக 1000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொப்பரை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகி றது. தற்போது தேங்காய்ப் பருப்பு விலை 1 கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு ஒன்றிய அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105 க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110 க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகி றது.  நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகி றது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரோயா பி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.  தேங்காய் கொப்பரை கொள்முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், தமிழ் நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற் கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில், தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு தெரிவித்துள்ளார்.

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திடுக:  மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 10- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணி யாளர்கள் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரியில், மக்கள் நலப்பணியாளர் கள் சம்பந்தமாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரி யும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப் படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  மக்கள் நலப்பணியாளர்கள் கோரிக் கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர். மாவட்ட தலைவர் இராமநாதன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பி.பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, முனி யப்பன்‌ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில்,ஏராளமானோர் பங்கேற்றனர்.

குறை தீர்க்கும் முகாம்

ஈரோடு, ஜூன் 10- ஈரோட்டில் பொது விநி யோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் முகாம் (சனிக்கிழமை) இன்று அனைத்து வட்டங் களிலும் நடைபெறுகிறது. இம்முகாமில், புதிய  குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டை யில் பெயர் சேர்த்தல் மற் றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம்  போன்ற கோரிக்கை களை பொதுமக்கள் மனுக் கள் மூலம் தெரிவிக்கலாம்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புகூட்டு இயந்திரங்கள்

ஈரோடு, ஜூன் 10- மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை ஈரோடு விவசாயி கள் மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட் பம், மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கு தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத் தில் 13 மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற இந்த மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உதவும்.  வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்தி ரங்களான மாவரைக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும். விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத் தில் விபரம் அறியலாம்.  மேலும், ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424-  2904843 என்ற எண்ணிலும், கோபி உதவி செயற்பொறி யாளரை 04285-290069 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

மளிகைக்கடை சுமைப் பணியாளர்களுக்கு 25 சதவிகிதம் சம்பள உயர்வு ஒப்பந்தம்

திருப்பூர், ஜூன் 10– திருப்பூர் டவுன் மளிகைக்கடை சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கு 25 சதவிகிதம் சம்பள உயர்வு ஒப்பந்தம் வெள்ளி யன்று ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் நகரின் மையப் பகுதியில் உள்ள மொத்த  வியாபார மளிகைக் கடைகளில் சரக்குகளை ஏற்றி,  இறக்கும் வேலை செய்யும் சுமைப்பணித் தொழிலாளர் களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு  ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தம் 2022 ஜனவரி  மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மளிகைக் கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகளுக்கும், சிஐடியு, ஏடிபி  தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே சுமைப்பணித் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டது. இதில் மூன்றாண்டு காலத்துக்கு 25 சதவிகி தம் சம்பள உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இந்த  ஊதிய உயர்வு வரும் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வரு கிறது. இதில், மளிகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தனபால் (மணிப்பால்), பொருளாளர் வெங்கிடு பதி (மணியம்), துணைச் செயலாளர் செல்வகணபதி (வர் ணம்) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங் கங்கள் தரப்பில் திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணித்  தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஏடிபி மாநகர் மாவட் டச் செயலாளர் கண்ணபிரான், நிர்வாகி கிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். இந்த சம்பள உயர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவ தைத் தொடர்ந்து எண்ணெய்க் கடை, உப்புக்கடை சுமைப் பணி தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு ஒப்பந்தம் விரை வில் நிறைவேற்றப்படும் என்று சிஐடியு சுமைப்பணித் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால் தெரிவித் தார்.

2 டன் ரேசன் அரிசி கடத்தல்:  குடிமங்கலத்தில் ஒருவர் கைது

திருப்பூர் ஜூன் 10- திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு துறை துணை ஆய்வாளர் இசக்கி மற்றும் போலீசார் குடிமங்கலம் நால்ரோடு சந்திப்பில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் தடுப்பு சம்பந்தமாக வாகன தணிக்கை செய்து  கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து  கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் அடிப்படையில்  நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி 2  டன் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தாராபுரம் சகுனி பாளையத்தை சேர்ந்த சிதம்பரம் (33) என்பது  தெரியவந்தது. தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும்  பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு  விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வாக னத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்ப ரத்தை கைது செய்து வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பூர், ஜூன் 10- பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் வழிப்பறி யில் ஈடுபட்ட இரண்டு பேரை காவலர்கள் கைது செய்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). பல்லடத்தில் வேலை செய்யும் இவர் கடந்த 7ஆம்  தேதி இரவு நண்பரைப் பார்க்க காரணம்பேட்டை வந்து விட்டு அங்குள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த  ரூ.3,500 பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.  இதையடுத்து சதீஷ்குமார் பல்லடம் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இந்நிலையில் காரணம்பேட்டையில் காவல் துறையினர் வாகன சோதனை செய்தபோது,  சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த அருண் (22), அதே  பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (21) என்பதும், சதீஷ்குமா ரிடம் வழிப்பறி செய்தவர்கள் என்றும் தெரியவந்தது. மேலும், அவர்கள் பல்லடம் அருகே மதனபுரி டவுனில்  வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.75 கோடிக்குப் பருத்தி ஏலம்

 தாராபுரம், ஜூன் 10- திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தில் ரூ. 1.75 கோடிக்குப் பருத்தி ஏலம் போனது.  மூலனூர் ஒழுங்குமுறை விற்பன கூட முதுநிலை செயலா ளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.  இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,  கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 670 விவசாயிகள் பருத் தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதிகபட்ச  விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.11ஆயிரத்து 879ம்  குறைந்தபட்ச விலையாக ரூ. 8ஆயிரத்து 150க்கும் சராசரி  விலையாக ரூ.9ஆயிரத்து 880க்கும் விலை போனது.  மொத்தம் 5437 மூட்டைகள் கொண்ட ஆயிரத்து  837 குவிண்டால் பருத்தி ரூ. 1 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரத்து 917க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில்  18 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளைக்  கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

உடுமலையில் எண்ணும் எழுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

திருப்பூர், ஜூன் 10- ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் மாதம் 6ஆம் தேதி  முதல் 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாரதியார் நூற் றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு  மையங்களில் 163 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட் டது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்க ளின் கற்றல் நிலைகளை கருத்தில் கொண்டும், கொரோனா பேரிடரால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும்  பொருட்டும் 2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயது வரை  உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எழுதவும், படிக்கவும்,  அடிப்படை கணக்குகளை செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர் பயிற்சி கையேடுகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, மாண வர்களுக்கான பயிற்சி நூல்கள் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளன என்பது பற்றி பயிற்சியில் விளக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் ஆசிரியர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மாதிரி வகுப்பினை எடுத்த னர். பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்  கருவிகளையும் ஆசிரியர்கள் குழுக்களாக இணைந்து தயா ரித்தனர்.  இந்த ஐந்து நாள் பயிற்சியில் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன  முதல்வர் முனைவர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர் கள் விமலாதேவி, பாபி இந்திரா ஆகியோர் பார்வையிட்டு எண்ணும், எழுத்தும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தனர். பயிற்சிக்கான ஏற் பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முக சுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம் மற்றும்  மனோகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ரேசன் அரிசி கடத்தியவர் கைது

நாமக்கல், ஜூன் 10- குமாரபாளையத்தில் ரேசன் அரிசி கடத்தியவரை போலீ சார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கே.ஓ.என். தியேட்டர் அருகே ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து அந்த பகுதிக்கு  நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டார். அப்போது ஒருவர், ரேசன் அரிசி மூட்டைகளை ஆம்னி வேனில் அடுக்கிக்கொண்டிருந்தார். அவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஈரோடு மாவட் டம், பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோ தரன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி  வேனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் அரிசி மூட்டைகள் மற்றும் ஆம்னி வேனை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து தாமோதரனை கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம், ஜூன் 10-  சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக ளுக்கு 15 ஆண்டுகள்  தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம், தியாகராஜன் என்ற வாலிபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சாட்சி யங்களில் அடிப்படையில் தியாகரா ஜன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார். இதேபோல் ஆத்தூர் புலியங் குறிச்சி, கிழக்கு தெருவைச் சேர்ந்த  16 வயது சிறுமியிடம் ராஜ்குமார் என்ற  வாலிபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜ்குமா ருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலை மறைவாக உள்ள ராஜ்குமாரை உடன டியாக பிடித்து சிறையில் அடைக்க நீதி பதி உத்தரவிட்டார்.

அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிவு

தருமபுரி, ஜூன் 10- தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு வெண்பட்டு கூடு வரத்து சரிந்துள்ளது. தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு நாள் தோறும் மஞ்சள் மற்றும் வெண்பட்டு கூடுகள் 30க்கும் மேற் பட்ட விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்து கொண்டி ருந்தனர். இங்கு நல்ல விலை கிடைப்பதால் தருமபுரி மட்டு மன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து குறைந்துள் ளது. கடந்த 7 ஆம் தேதி 15 விவசாயிகள் 508 கிலோவும், 8 ஆம் தேதி 7 விவசாயிகள் 306 கிலோவும், 9 ஆம் தேதி 7  விவசாயிகள் 582 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.  வெள்ளியன்று வெண்பட்டு கூடு ஒரு கிலோ அதிகபட்சமாக 799க்கும், குறைந்தபட்சமாக 540க்கும், சராசரியாக 661க்கும் ஏலம் போனது.

ஊராட்சி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் திட்டப்பணிகளை செய்யாததால் ஆட்சியர் உத்தரவு

உதகை, ஜூன் 10- திட்ட பணிகளை சரிவர செய்யா ததால் உல்லத்தி ஊராட்சி மேற்பார் வையாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை  ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சி, அம்மநாடு பழங்குடியி னர் கிராமத்தில் 2020-21 ஆம் ஆண் டின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சாலனி என் பவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங் கப்பட்டது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் அம்ரித், கடந்த டிசம்பர் மாதம்  நேரில் சென்று ஆய்வு செய் தார். அப்போது வீட்டின் பணி ஜன் னல் மட்டத்திற்கு கட்டப்பட்டு இருந் தது. இதனை விரைவில் கட்டி முடிக் குமாறு பணி மேற்பார்வையாளர்  பொன்மொழிக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில், இந்த பணி கள் குறித்து கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அம்ரித் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது, கூரை மட்ட  அளவிற்கு மட்டுமே பணி நடை பெற்று இருந்தது. மேற்கண்ட பணி யானது ஜன்னல் மட்டத்தில் இருந்து 6 மாத காலம் கடந்தும் கூரை அள விற்கு மட்டுமே பணி நடைபெற்று உள்ளது.  இதேபோன்று பல்வேறு திட்டப் பணிகளில் முன்னேற்றம் இல்லாம லும், பணிகள் முடிக்கபடாமலும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து பலமுறை மேற்பார் வையாளருக்கு அறிவுறுத்தப்பட் டும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள்படி பொன்மொழியை தற் காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தர விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளை சரிவர பெய்யாததால்  பர்லியார் ஊராட்சி செயலாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

ஆட்டோக்கள் பறிமுதல்

தருமபுரி, ஜூன் 10-  தருமபுரி, சேலம் நெடுஞ் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் வியாழனன்று அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்ட னர். அப்போது ஆவணங் கள் இல்லாத 6 ஆட்டோக் களை பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர்களி டமிருந்து ரூ.98 ஆயிரம் அபரா தம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம், தகு திச்சான்று, அனுமதி சான்று  இன்றி ஆட்டோக்களை இயக்க கூடாது என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது.