states

img

சிம்பன்சிகளின் நினைவாற்றல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

பழகியவர்களின் முகங்கள் கடல் போல காட்சியளிக்கும் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு தூரத்து உறவினரின் குடும்பத் திருமண விழாவாக இருந்தாலும் அந்த கூட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த மனிதர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் நம் நினைவாற்றல் அப்போது நமக்கு கை கொடுத்து உதவுகிறது. இதே நினைவாற்றல் பண்பு பரிணாமரீதியாக நமக்கு நெருங்கிய உறவான ஏப் வகை குரங்குகளிடமும் காணப்படுகிறது.

பிரிந்தவர் ஒன்றுசேரும்போது

முன்பு சிறிது காலம் பழகியிருந்தாலும் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த பிறகும் பனோபோ (bonobo) மற்றும் சிம்பன்சி (chimpanzee) வகை  குரங்குகள் தங்கள் சக உறவுகள், நட்புகளை நினை வில் வைத்துக்கொள்கின்றன என்று விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளனர். தெரிந்தவர்கள் என்ற  நிலையில் அவை நட்பையும் உறவையும் வெளிப்  படுத்தும் இந்த அங்கீகாரம் சக உறவுகளுடன் அவை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பழகிய விதத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. மனிதர்களை தவிர ஒரு சில விலங்குகளிடம் அரிதாக மட்டுமே காணப்படும் சில நீண்ட கால நினைவாற்றல் திறனை இது எடுத்துக்காட்டுகிறது.  “ஏப் வகை குரங்குகளிடம் காணப்படும் ஞாபக சக்தியை பற்றி முதல்முறையாக நடட்தப்பட்ட  இந்த ஆய்வின் மூலம் அவை பெற்றிருக்கும்  நினைவாற்றல் அவற்றின் சமூகத்தொடர்பு களால் வடிவமைக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இத்தகைய சமூக நினைவாற்றல் மற்றும் அதன் ஆழமான அளவு மனிதர்களிடம் உள்ள நீண்ட கால நினைவாற்றல் போலவே  குரங்குகளிடமும் காணப்படுவது ஆச்சரியமா னது. மனிதர்கள் தவிர இத்தகைய நீண்ட கால நினை வாற்றல் டால்பின்களிடம் காணப்படுகிறது. டால்பின்கள் மற்ற விலங்குகளின் குரல்களை இருபது ஆண்டுகள் வரை நினைவில் வைத்துக்  கொள்கின்றன. முன்பு பழகிய குழுவில் உள்ள  உறுப்பினர்களின் குரல்களை பனோபோக்கள் ஐந்தரை ஆண்டுகள் வரை ஞாபகத்தில் வைத்துக்  கொள்வது இந்த ஆய்வின் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது” என்று ஆய்வின் முதல் ஆசிரி யரும் பெர்க்லி (Berkeley) கலிபோர்னியா பல்க லைக்கழக விஞ்ஞானியுமான டாக்டர் லாரா லூயிஸ் (Dr Laura Lewis) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை தேசீய அறி வியல் அகாடமி (Proceedings of the National Academy of Sciences) என்ற ஆய்விதழில் வெளி வந்துள்ளது. 26 பனோபோக்கள் மற்றும் சிம்பன்சி களிடம் அந்தந்த இனங்களைச் சேர்ந்த உறுப்பி னர்களின் படங்கள் பக்கவாட்டில் வைத்து காட்டப்பட்டன. ஒரே சமயத்தில் இரண்டு படங்கள்  காட்டப்பட்டன. அதில் ஒன்று அதற்கு முன்பு அவை  சந்திக்காத குரங்கின் படம்.

என்றும் நினைவில் இருக்கும்  நேர்மறை உறவுகள்

மற்றொன்று இப்போது இறந்துபோய்விட்ட அல்லது ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த குழு வில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்ட முன்னாள் குழு உறுப்பினரின் படம். இந்த செயல்  முறையின் போது ஆய்வுக்குழுவினர் குரங்கு களின் கருத்தூன்றிய பார்வையை ஆராய்ந்த னர். முன்பின் பார்க்காத புதிய குரங்குகளின் படங்  களை விட முன்னாள் குழு உறுப்பினர்களின் படங்களை அவை நீண்டநேரம் பார்த்துக்கொண்டி ருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. என்றாலும் ஜப்பானில் உள்ள க்யுமோ மோட்டோ (Kumamoto) சரணாலயத்தில் வாழும்  பன்னிரண்டு ஏப் வகை குரங்குகள் திரையில் தெரி யும் கண்களின் அசைவைக் கொண்டு ஒரு உயி ரினம் நினைப்பதைக் கண்டறியும் (Ey tracking)  பரிசோதனைகளுக்கு முன்பே நன்கு பழக்கப்பட்டி ருந்தன. அதனால் அவற்றை ஆராய்ந்தபோது கிடைத்த பலன்கள் வலுவானதாக இருந்தது. லூயீஸ் (Louise) என்ற பெயருடைய பனோபோ  வகை குரங்கு அதன் சகோதரி லோரெட்டா (Loretta) மற்றும் அதன் உறவினர் எரினை  (Erin)  பரிசோதனை நடப்பதற்கு முன்பு சந்தித்து 26  ஆண்டுகள் ஆகியிருந்தன. வியப்பூட்டும் விதத்தில் லூயீஸ் அவை இரண்டையும் வலுவாக  உற்றுநோக்கியது. அடையாளம் கண்டுகொண் டன. முன்னாள் குழு உறுப்பினர்களுடன் இருந்த  உறவு எதிர்மறையாக இருந்தால் அவை காட்டப்  பட்ட குரங்குகளை பார்க்கும் நேரத்தை விட நேர்  மறையாகப் பழகிய உறுப்பினர்களை கூடுதல் நேரம் உற்றுநோக்கி பார்த்தன. நேர்மறை பழக்கத்தில் இருந்த உறுப்பி னர்களை அருகில் வந்து சீராக நீண்டநேரம் பார்த்தன. பிரிந்துசென்று பல ஆண்டுகள் ஆகி விட்டாலும் அவை முன்பு தங்கள் இனத்தவருடன் இருந்த உறவை முக்கியமாக கருதுகின்றன என்பதை இது உறுதிசெய்கிறது. இந்த நீண்ட கால நினைவாற்றல் பரிணாமரீதியாக ஏப் வகை குரங்குகளுக்கு எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்து மேலும் தீவிர மாக ஆராயப்படவேண்டும் என்று லூயிஸ் கூறு கிறார்.

நட்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குரங்குகள்

பெண் குரங்குகள் இனப்பெருக்க வயதை அடையும்போது உள்-இனப்பெருக்கத்தை தவிர்ப்பதற்காக அவை தாங்கள் பிறந்த குழு வை விட்டு அருகில் இருக்கும் மற்ற குழுக்க ளுக்கு சென்றுவிடுகின்றன. இவற்றின் மிகச்சிறந்த சமூக இயக்கவியல் காரணமாக இவை முன்னாள்  தனிநபர் உறுப்பினர்களை பிரிந்துசென்று பல  ஆண்டுகள் ஆகிவிட்டாலும் நன்கு பழகிய உறுப்பினர்களை இவை நன்றாக நினைவில் வைத்துக்கொள்கின்றன. இவற்றின் தனிச்சிறப்பு மிக்க நினைவாற்றல் பண்பிற்கு இதுவும் ஒரு கார ணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”உறவினர்கள் போலவே உறவு இல்லாத வர்களையும் ஏப் குரங்குகள் நன்றாக ஞாபகத்தில்  வைத்துக்கொள்வது குடும்பத்திற்கு வெளியில் உள்ள உறவுகளையும் அவை முக்கியமாக நினைக்கின்றன என்பதை காட்டுகிறது. உறவு  இல்லாதவர்களுடனும் இவை வலிமையான  நட்பையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதை  இது வலியுறுத்துகிறது” என்று ஆய்வுக்கட்டு ரையின் மற்றொரு ஆசிரியரும் ஜான்  ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானியு மானடாக்டர் கிறிஸ்டோபர் க்ரூப்பனே (Dr Christopher Krupenye) கூறுகிறார். அதிசயிக்கவைக்கும் குரங்குகளின் நினை வாற்றல் பற்றிய இந்த ஆய்வு சக மனிதரிடம்  நல்லுறவை எவ்வாறு பேணி பாதுகாத்து வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்றுத்தருகின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 

;