states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் திமுக - காங்கி ரஸ் உறவை முறிக்க வேண்டும் என்று நினைக்கி றார்கள். ஒரு காலமும் அவர்களுடைய அரசியலுக்கு நாங்கள் (திமுக-காங்கிரஸ்) பலியாக மாட்டோம். திமுக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
  2. ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியா ழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள்,  அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக  செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமை (10.09.2022) வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  3. செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர்  தகுதி தேர்வின் (TET) முதல் தாள் பல்வேறு காரணங்க ளால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான தேதி  பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
  4. திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு பணி யில் மேற்கு வங்க அரசின் அலட்சியப் போக்கு சுற்றுச்  சூழல் பாதிப்புக்கு வழிவகுத்து உள்ளது. இதனால் அம்மாநில அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்து,  அபராத தொகையை 2 மாதங்களில் செலுத்த தேசிய  பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஏ.கே.கோயல் அமர்வு  உத்தரவிட்டுள்ளது.
  5. 2-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்  பாடம் கொடுக்கக்கூடாது. 9 முதல் 12-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்க வாரம் ஒருநாள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வரும்  புதிய நடைமுறையை கொண்டு வர மத்தியப் பிரதேச  அரசு முடிவு செய்துள்ளது.
  6. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சூறையாடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திரா விடர் கழக நிர்வாகி பிரபு என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
  7. வெடிகுண்டு மூலமாக நடந்த சதிவேலையில் கொலம்பியாவின் தேசிய காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை வாகனம் ஒன்றில் பயணம் சென்று கொண்டிருந்த இவர்கள், பயங்கரவாதிகளால் சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் சார்பாக சமூக நலத்திட்டப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
  8. எரிபொருள் விலைகள் இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டிம் மக்பி தெரிவித்துள்ளார். வரும் குளிர்காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் எரிபொருள் விலைகள் அதிகரித்த நிலையிலேயே இருக்கும் என்றும், ஒருவேளை குறைவது என்றால் அது 2024-2025ல்தான் அது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ரஷ்யா மீதான தடைகளை ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
  9. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியுள்ளார். பொருளாதார மற்றும் வாழ்க்கைச் சூழல் படுமோசமாக ஆனதால் இலங்கை மக்கள் பெரும் எழுச்சிப் போராட்டங்களை நடத்தினர். கடைசி வரையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க முயற்சிகளை எடுத்து வந்த கோத்தபய ராஜபக்சே, இறுதியில் வேறு வழியின்றி ஜூலையில் பதவியை விட்டு விலகினார். தனது மாளிகை முற்றுகையிடப்பட்டதால் சிங்கப்பூர் தப்பியோடினார்.