states

img

ஆர்எஸ்எஸ்-சை பாராட்டிப் பேசிய மம்தா

கொல்கத்தா, செப். 2 - மேற்கு வங்க தலைமைச்  செயலகத்தில்  புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மம்தா பானா்ஜி, ‘ஆர்ஸ்எஸ்ஸில் அனைவரும் மோச மானவா்கள் இல்லை. அந்த அள வுக்கு கெட்ட அமைப்பும் இல்லை. பாஜக செய்யும் அரசியலுக்கு ஆத ரவு தெரிவிக்காதவா்களும் அங்கு உள்ளனர்’ என்று கூறியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ‘ஆா்எஸ்எஸ் அமைப்பை மம்தா பாராட்டுவது இது முதல் முறை யல்ல. முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியிலேயே அவா் அங்கம் வகித் துள்ளாா். வாக்குகளைப்பெற சில நேரம் இந்து அடிப்படைவாதி களுக்கு ஆதரவாகவும் சில நேரம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் மம்தா பானர்ஜி பேசுவாா்’ என்று காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவா் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடி யுள்ளார். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியும், மம்தாவின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப் பேச்சை விமர்சித்துள்ளார். ‘2003-இல் மம்தா, ஆா்எஸ்எஸ் அமைப்பை ‘தேசபக்தா்கள்’ என் றும், பதிலுக்கு ஆா்எஸ்எஸ் அமை ப்பு மம்தாவை ‘துா்கை’ என்றும் பரஸ்பரம் பாராட்டிக்கொண்டனர்’ என்பதை ஒவைசி நினைவுபடுத்தி யுள்ளார்.