states

img

லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிக் காற்று : ரபேல் கோரியா கருத்து

பப்லா என்பது மெக்சி கோவில் உள்ள ஒரு நகரமா கும். லத்தீன் அமெரிக்கா வைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் மற்றும் ஸ்பெயி னின்  தலைவர்கள் இங்கு நடக்கும் கூட்டமொன்றில் கலந்து கொண்டுள்ளனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற் றுள்ளவர்களை “பப்லா குழு”வினர் என்று அழைக் கிறார்கள்.

பப்லா(மெக்சிகோ), டிச.3- தற்போது நடைபெற்று வரும் தேர்தல் முடிவுகள் மூலம் லத்தீன் அமெரிக்க நாடு களில் இடதுசாரிக் காற்று வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரியா கூறியுள்ளார்.  மெக்சிகோவின் பப்லா நகரத்தில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் ரபேல் கோரியா, ஸ்பெயினின் முன்னாள் ஜனாதிபதி சபடெ ரோ, பராகுவேயின் முன்னாள்  ஜனாதிபதி லூகோ, கொலம் ்பியாவின் முன்னாள் ஜனாதி பதி எர்னஸ்டோ சாம்டெர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். காணொளி வழியாக பிரேசிலின் முன்னாள் ஜனாதி பதிகள் லூலா, டில்மா ரூசெப், பொலிவியாவின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஹோண்டுராசில் எதிர்க் கட்சித் தலைவரும், தேசியக் கட்சித் தலைவருமான அசிபுரா தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இது மத்திய அமெரிக்கப் பகுதிக்கான முக்கியமான நிகழ்வு என்று ஸ்பெயினின் முன்னாள் ஜனாதிபதி சபடெரோ கூறி யுள்ளார்.

மேலும், ஹோண்டு ராசில் முதல் பெண் ஜனாதி பதியாகப் சியோமரா பொறுப்பேற்கப் போகிறார். பல்வேறு சமூகப் பிரச்சனை கள் கொண்டுள்ள மத்திய அமெரிக்காவில் இது ஒரு நல்ல மாற்றம் என்று அவர் தெரிவித்தார். அர்ஜெண்டினாவில் துவங்கி, பின்னர் நிகரகுவா, பொலிவியா வெற்றிகளோடு தற்போது ஹோண்டுராசில் நடைபெற்று வரும் நிகழ்வு கள் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிக் காற்று வீசுகி றதைக் காட்டுகிறது என்று ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரியா குறிப்பிட்டார். மெக்சிகோ வில் நடைபெற்று வரும் லோபஸ் ஓப்ரடார் தலைமை யிலான இடதுசாரி அரசுக்கும் பப்லா குழுவினர் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக் கிறார்கள்.

;