கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் சந்தேக மரணம் தமிழ கத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகம் முழுமையான உண்மை களை வெளியே சொல்லாமல் மறைக்க முயற்சித்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இதே பள்ளியில் ஏற்கனவே சில மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ள தாகவும் அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் செய்திகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சம்பவம் நடைபெற்று நான்கு நாள் வரை மரணத்திற்கான உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தியதும் நிலைமையை மோசமாக்கிட உதவியுள்ளது. இப்பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களோடு நெருங்கியவர்கள் என்ப தால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள் வதில் தாமதம் கடைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள அடிப்படை யில் இச்சம்பவத்தில் நடந்துள்ள உண்மை நிகழ்வு கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. முறையான விசார ணை நடத்தி அனைத்து விபரங்களையும் வெளிக் கொணர வேண்டும். இதில் தவறு இழைத்த வர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மாணவியின் இறப்பிற்கு நீதி கோரி நடந்துள்ள போராட்டங்கள் முழுவதும் இயல்பா னது. எனினும், போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. வன்முறையை காரணம் காட்டி அப்பாவி மாணவர்களையும், பொது மக்களையும் கைது செய்யும் நடவடிக்கை யினை காவல்துறை மேற்கொள்ளக்கூடாது என்பதையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தொடர்ந்து சிறுமிகள், பெண் குழந்தைகளி டம் மனிதத் தன்மையற்ற வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருவது கவலைக்குரியது. அரசாங்கம் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுமிகள், பெண் குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும். தமிழக அரசு மேலும் இதுபோன்று மாணவி கள், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தடுத்திடவும், பாலியல் வன்முறை கொடுமை கள் நடக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற குடும்ப வன்முறை எதிர்ப்பு சிபிஎம் சிறப்பு மாநாட்டில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி முன்மொழிந்த தீர்மானத்திலிருந்து...