states

ஜூன் 23 அதிமுக பொதுக்குழு கூடுகிறது

சென்னை,ஜூன் 3- கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுக தலைமை தேர்தல் ஆணையத் திடம் கால அவகாசம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது.  இந்த நிலையில், வருகிற 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்  என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.