சென்னை,ஜூன் 3- சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,400-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம், இந்த வார தொடக்கத் திலும் ஏற்ற இறக்கமாக காணப் பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வெள் ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தங்கம் ஒரு சவரன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது. கடந்த 30 ஆம் தேதி (திங்கட் கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31 ஆம் தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக் கிழமை (ஜூன் 3) மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப் படுகிறது.