states

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு

ஒபெக் அமைப்பைச் சேர்ந்த பெட்ரோ லிய ஏற்றுமதி நாடுகள்  மற்றும் இதர பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் 29ஆவது அமைச்சர்கள் கூட்டம் காணொலி வழியில்  ஜூன் 2ஆம் நாள் நடைபெற்றது.  இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், உற்பத்தி நாளுக்கு 6 லட்சத்து 48 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அண்மையில், ரஷ்ய-உக்ரைன் மோதல், ரஷ்யா வின் மீதான மேலை நாடு களின் தடை ஆகியவற்றின் காரணங்களாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை யில், ஒவ்வொரு பீப்பா யின் விலை, சுமார் 110  அமெரிக்க டாலர். எண்ணெய் விலையை நிலைப்படுத்தவும் பண வீக்க த்தைக் குறைக்கவும் உற்பத்தி அளவை அதி கரிக்குமாறு முக்கிய எண்ணெய் நுகர்வு  நாடு கள் பல முறை வேண்டு கோள் விடுத்தன.