states

img

இந்தி திணிப்புக்கு தமுஎகச எதிர்ப்பு

சென்னை, ஏப்.10- தமுஎகச மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாட்டின் ஒற்றுமையை வலி யுறுத்தும் முக்கிய பகுதியாக இந்தி மொழி யை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பதன் மூலம் இந்தி திணிப்பில் ஒன்றிய ஆட்சியாளர்கள் மீண்டும் மூர்க்கம் காட்டத் துவங்கியுள்ள னர். இது வன்மையாக கண்டிக்கத்தக் கது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு முன் நிபந்தனையாக இந்தித் திணிப்பை முன்னிறுத்துவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இதன்மூலம் ஒருமைப் பாட்டை சிதைக்கவே ஒன்றிய அரசு முயல்கிறது. அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழி களையும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் நியாய மான,

ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்க்கிற கோரிக்கையாகும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அனைத்து விஷயங்களிலும் இந்தி மற்றும் சமஸ் கிருத திணிப்பையே முன்வைக்கிறது. ஆங்கில மொழிக்கு மாற்றாக, இந்திய மொழியான இந்தியை ஏற்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை இவர்கள் இந்திய மொழிகளாக ஏற்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அனைத்து இந்திய மொழி களுக்கும் சமமான வாய்ப்பு வழக்கு வதற்கு பதிலாக பன்மைத்துவத்தை சிதைத்து ஒரே நாடு என்பதில் துவங்கி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒற்றைத்துவத்தை திணிப்பதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். வெவ்வேறு மொழி பேசும் மாநி லங்கள் தங்களுக்குள் தகவல் தொடர்புக்கு இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று கூறு வது எதேச்சதிகாரமானது. ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து வலு வான குரல் எழுப்புமாறு அனைத்து முற்போக்கு ஜனநாயக அமைப்புகளை யும் தமுஎகச கேட்டுக் கொள்கிறது.