states

ஜிஎஸ்டிக்குப் பிறகு குஜராத்தில் மட்டும் 25 சதவிகித நிறுவனங்கள் மூடல்!

அகமதாபாத், ஜூலை 2- நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற  பெயரில், கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூலை  மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax -GST) மோடி  அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வணிகம் செய்வது எளிதாகும் என்று அது கூறியது. அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி  விதிப்பு அமல்படுத்தப்பட்டதன் 5-ஆவது  ஆண்டு நிறைவையும் மோடி அரசு தற் போது கொண்டாடி வருகிறது. தில்லியில் நடந்த கொண்டாட்டத் தில், “குழப்பத்தை ஏற்படுத்தி வந்த பல அடுக்கு வரி விதிப்பு நடைமுறை ஜிஎஸ்டி- யால் ஒழிந்தது; வரி செலுத்துவோரி டையே புதிய நம்பிக்கை ஏற்பட்டது” என்று  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசினார்.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியோ, “சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5-ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கி யமானது” என்று சற்று அதிகமாகவே கூறி னார். இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத் தப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் வணிக நிறுவனங்கள், ஜிஎஸ்டி பதிவுகளை அர சாங்கத்திடமே சரண்டர் செய்து கடை களை மூடிவிட்டுச் சென்றுவிட்டதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த 2 லட்சத்து 75 ஆயிரம் நிறு வனங்கள் என்ற எண்ணிக்கையானது, குஜராத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் 11.1  லட்சம் நிறுவனங்கள் என்ற எண்ணிக்கை யில் சுமார் நான்கில் ஒரு பங்கு என்பது முக்கியமானதாகும். 

அதிலும், கொரோனா கட்டுப்பாடு கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் கடந்த இரண்டு  ஆண்டுகளில் மட்டும் 1.24 லட்சம் நிறு வனங்கள் ஜிஎஸ்டி-யில் இருந்து வெளி யேறி இருப்பது தெரியவந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் 30 ஆயிரத்து 732 வணிக நிறுவனங்கள் தொழில் முடக்  கம் காரணமாக ஜிஎஸ்டி-யில் இருந்து  வெளியேறுவதாக அறிவித்த நிலையில்,  2020-21 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 213 நிறுவனங்களாக அதிக ரித்துள்ளது.  மறுபுறத்தில், 2018-19 நிதியாண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் புதிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த நிலையில் 2020-21 நிதியாண்டில் அது 1 லட்சத்து 39 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுதொடர்பாக, ‘டைம்ஸ் ஆப் இந்தி யா’வுக்கு பேட்டியளித்த குஜராத் வர்த்த கம் மற்றும் தொழிற்துறை துணைத் தலை வர் பதிக் பட்வாரி “ஜிஎஸ்டி வரிக் கொள்கை ஒவ்வொரு மாதமும் வரி செலுத்த வேண்டும் என்பது போன்ற பல் வேறு நடைமுறை சிக்கல்களை கொண்டி ருக்கிறது. சிறுமுதலீட்டில் தொழில் துவங்கியவர்கள் தங்களுக்கு வரவேண் டிய வரி நிலுவைகளை எதிர்பார்த்து காத்  திருக்கும் சிக்கலான சூழலை எதிர்  கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பெருநிறுவனங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வது; தங்கள் துணை  நிறுவனங்களை ஒன்றாக்கி விடுவது போன்ற முடிவுகளை தொழில் முனை வோர்கள் மேற்கொண்டனர். தனித்தனி ஜிஎஸ்டி செலுத்தும் நடைமுறையால் ஏற்பட்ட பெரும் செலவினங்களை இதன்  மூலம் அவர்கள் தவிர்த்துக் கொண்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொரோனா ஊரடங்குக் குப் பின் உணவகங்கள், சுற்றுலா, சிறு  வணிகர்கள், ஜவுளி, சில்லறை வியாபாரி கள் மற்றும் தங்கும் விடுதிகள் பெரு மளவு மூடப்பட்டதாக பதிக் பட்வாரி தெரி வித்துள்ளார். ஆனால், ஜிஎஸ்டி அதிகாரிகளோ, “தொழில் வளர்ச்சி அடையும் என்ற ஆர்வ மிகுதியால் ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து சட்டரீதியான உரிமங்களையும் பதிவு செய்து விட்டு பின்னர் தொழில் முடக்கம் காரணமாக வெளியேறியவர்களே அதி கம்” என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர். எந்த வகையில் பார்த்தாலும், குஜ ராத்தில் கடந்த மூன்றாண்டுகளில் தொழில் முடக்கம் காரணமாக மூடப்பட்ட நிறு வனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப் படும் தொழில்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.  இவ்வாறு இந்திய நாட்டின் தொழில்  களை அழித்த ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட நாள், ஆளுநர் ரவி சொல்வது போல,  உண்மையிலேயே ‘சுதந்திர தினம், குடி யரசு தினத்தை விட முக்கியமானது’தான்.

;