சென்னை,ஆக.30- திருமணங்களுக்கு பொது அறிவிப்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுயமரியாதைத் திருமணங்களுக்கு பொது அறிவிப்போ அல்லது நிச்சயமோ தேவையில்லை, வழக்கறிஞர் அலுவ லகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சுய மரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சுயமரியாதைத் திரு மணங்கள் செல்லுபடியாகாது என்று மே மாதம் 5ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள் ளதோடு சுயமரியாதைத் திருமணங்களை மேலும் சட்டப்பூர்வமாக்கி வழங்கியுள்ள தீர்ப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. . இந்துத் திருமணச் சட்டப்பிரிவு 7(A) இன் படி, வழக்கறிஞர்கள் நண்பர்களாக வோ அல்லது உறவினர்களாகவோ இருந்து தனிப்பட்ட அளவில் திருமணங்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம் என உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது அரசியல் சாசனச் சட்டப்படி அடிப்படை உரிமை. இந்த உரி மையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. திருமண வயது வந்த இருவர் சுயமாக விருப்பப்பட்டு திருமணம் செய்ய நினைக் கும்போது இருவரும் வெவ்வேறு சாதிக ளைச் சார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதிகமாகிறது. திரு மணத்தைத் தடுப்பதோடு,தங்கள் பிள்ளைக ளையே பெற்றோர்கள் கொலை செய்கிற கொடுமைகளும் நடைபெற்று வருகிறது. இத்தகைய நிலையில் சுயமரியாதை திருமணங்களுக்கு பொது அறிவிப்பு தேவையில்லை, வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் திரு மணங்கள் செல்லும் என்கிற இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள் யாராவது ஒருவரின் பெற்றோர் திருமணப் பதிவின் போது உடன் இருக்க வேண்டும் என்று திருமணப் பதிவுத் துறை தற்போது வலியுறுத்திவருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இசைவாக, இந்துத் திருமணச் சடடப் பிரிவு 7(A) இன் கீழ், மேற்கண்டவாறு வலியுறுத்தக்கூடாது என தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை வெளி யிடவேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.