states

இந்தியாவுக்கு எதிராக அரபு நாடுகள் கொதிப்பு

புதுதில்லி, ஜூன் 6- நபிகள் நாயகம் குறித்த பாஜக செய்தித் தொடர்பாளர்களின் அவதூறு பேச்சு, சர்வதேச  விவகாரமாக மாறியுள்ளது.  முகமது நபிக்கு எதிரான பாஜக தலை வர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர் பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், இந்தியத் தூதர்களை அழைத்து அதி காரப்பூர்வமாக சம்மன் அளித்து எதிர்ப்பு தெரி வித்து இருப்பதுடன் இந்திய அரசு பொது மன்  னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு தங்களின் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளன. இந்தியத் தயாரிப்பு பொருட்களை புறக்க ணிப்போம் (#Boycott India) என்று அரபு நாடு களில் பிரச்சாரம் முன்னெழுந்துள்ளது. 

சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற  நாட்டின் வர்த்தக நிறுவனங்களில் இந்திய தயா ரிப்பு பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன.  சில நிறுவனங்களில் இந்திய பொருட்களை தடை செய்யப்பட்ட பொருட்கள் என்றும் ஸ்டிக்  கர் ஒட்டி மூடி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்  துள்ளனர். ‘இந்திய தயாரிப்புகளை புறக்க ணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும் அங்கு டுவிட்  டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு கண்டனம் தெரி விக்கும் விதமாக இந்தியர் ஒருவரை, கத்தார்  ஷேக் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்ப தால், அரபு நாடுகளில் பணியாற்றிவரும் 35 லட்  சம் இந்தியர்களின் வேலை மற்றும் பாதுகாப் புக்கும் தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்றிருக்கும் நிலையில், அந்த நாடும் இந்தியா தூதருக்குச் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பது, இந்தியாவுக்கு பெருத்த அவமரியாதையாக மாறியுள்ளது.  கத்தார் துணை அமீர், இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இரவு விருந்து அளிக்கவிருந்தார். ஆனால், இந்த  இரவு உணவு ரத்து செய்யப்பட்டு விட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வெங்கையா நாயுடு நடத்தவிருந்த செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மோடி அரசின் வெளி யுறவு கொள்கைக்கு பெருத்த அடியாக அமைந்  துள்ளது.

அவதூறுப் பேச்சு

பாஜக-வின் செய்தித் தொடர்பாளராக பதவி  வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மை யில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி மசூதி வழக்கு குறித்த விவாதத்தில்  கலந்து கொண்டார். அப்போது அவர் நபிகள்  நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோச மான கருத்துகளை தெரிவித்தது பெரும் சர்ச்சை யானது. அவரது பேச்சை தொலைக்காட்சி நெறி யாளரும் கண்டிக்கவில்லை. கூடவே, பாஜக வின் தில்லி ஊடக பொறுப்பாளர் நவீன் ஜிண்டா லும், முகம்மது நபிகளை அவமதிக்கும் நுபர் சர்மாவின் கருத்துடன் சேர்ந்து கொண்டார்.  நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் பேச்சுக்கள், பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லா மியர்கள் மாபெரும் கடையடைப்புப் போராட் டம் நடத்தினர். அப்போது இந்துத்துவா கூட்டத்தி னர் ஏட்டிக்குப் போட்டியாக கடைகளைத் திறக்கச் சொல்லி போராட்டம் நடத்தியதால், வன்முறை வெடித்தது. இதில் 40 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, இந்தியாவில் மட்டுமன்றி அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.  ஓமன் நாட்டின் தலைவர் (கிராண்ட்) முப்தி  ஷேக் அல் கலீலி, பாஜக தலைவர்களின் அவ தூறு பேச்சை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக மீதும் கடுமையாக விமர்ச னங்களை முன்வைத்திருந்தார். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில், ‘இந்தியா வைப் புறக்கணிப்போம்’ (#Boycott India) என்ற  ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்

வெங்கய்யா நாயுடு பயணத்தின் போது...

நபிகள் நாயகம் தொடர்பான பாஜக தலை வர்களின் சர்ச்சைக் கருத்து குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு கத்தார் அரசு சம்மன் அனுப்பியது. “இஸ்லாமிய சமூகத்தின் மீது  வெறுப்பை உமிழும் கருத்துகளை கூறுவோ ருக்கு தண்டனை ஏதும் வழங்காதது மனித உரி மைகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத் தலை ஏற்படுத்தும். இது வன்முறை மற்றும் வெறுப்பை உருவாக்கும்” என்று தீபக் மித்தலை நேரில் அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. கத்தார் பிரதமர் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜீஸ் அல் தானியை, இந்திய குடிய ரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்துக் கொண்டிருந்த, அதேவேளையில் கத்தார் அரசு இந்தியாவுக்கு இத்தகைய கண்ட னத்தை தெரிவித்தது, சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான் ஆகிய  நாடுகளும் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்  பின. “வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்  புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்” என குவைத்  அரசு கோரிக்கை விடுத்தது. அதுபோலவே ஈரா னும், இந்திய தூதரை, வெளியுறவு அமைச்ச கத்திற்கு வரவழைத்து தங்களின் ஆட்சேபணை பதிவு செய்தது. எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைந்தன.

குவைத்தின் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதர் சிபி ஜார்ஜை வரவழைத்து, “ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் வெளியி டப்பட்ட நபிகளாரின் அவமதிப்பு அறிக்கை களை முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்று தங்க ளின் எதிர்ப்பை அறிக்கையாக வழங்கியது. மோடி அரசு சமாளிப்பு அரபு நாடுகளின் அடுத்தடுத்த எதிர்ப்பை தொடர்ந்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார்  ஜிண்டால் ஆகியோரை செய்தித் தொடர்பா ளர்கள் பொறுப்பில் இருந்து பாஜக நீக்கியது.  அத்துடன், பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.  அதில், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்து வதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாஜக  எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்த வொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக  அத்தகைய நபர்களையோ அல்லது தத்து வத்தையோ ஊக்குவிப்பதில்லை. இந்தியா வின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று விளக்கம் அளித்ததுடன், “ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும்  மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளி யிடப்பட்டு விட்டது” என்று கூறியிருந்தார். இதையொட்டி, கத்தார் நாட்டிற்கான இந்திய  தூதா் தீபக் மிட்டல், கத்தார் அரசுக்கு விளக்க மளித்தபோது, நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண் டால் ஆகியோரின் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல! என்றும், “அந்தக் கருத்து கள் விஷம சக்திகளின் (fringe element) கருத்துகள்” என்றும் கூறினார். “இத்தகைய சர்ச்சை கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பி னர்களின் பார்வையே ஆகும்” என்று ஈரானுக்  கான இந்தியத் தூதரும் விளக்கம் அளித்தார்.

எனினும், “உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் பாஜக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குவைத் அரசு  வலியுறுத்தியது.  “நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவது  மத சுதந்திரத்தை மீறும் செயல்” என்று ரஷ்ய ஜனாதிபதி புதினும் தனது கண்டனத்தைத் தெரி வித்தார்.

இந்தியர் வேலைக்கு ஆபத்து?

இவற்றுக்கு இடையில் நபிகள் நாயகம்  குறித்த இந்திய ஆளும் கட்சித் தலைவர்களின்  விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,  இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும்  என்று வளைகுடா நாடுகளில் போர்க்குரல் எழுந்  துள்ளது. சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற  நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்  கள் அகற்றப்பட்டுள்ளன. சில கடைகளில் இந்திய பொருட்களை தடை செய்யப்பட்ட பொருட்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டி மூடிவைத்துள்  ளனர். கத்தாரை சேர்ந்த ஷேக் ஒருவர் இந்தியரை வேலையை விட்டு அனுப்பிவிட்டதாக கூறி  உள்ளார். அதில், “இந்தியாவை சேர்ந்த கார்  பெண்டர் ஒருவர் என்னுடைய ஸ்பான்சர் ஷிப்பில் கத்தாரில் வேலை செய்து வந்தார்.  அவர் பிரதமர் மோடியின் மதத்தை சேர்ந்தவர்.  இந்தியாவில் தற்போது விடுப்பில் இருக்கிறார். நபி அவமானப்படுத்தப்பட்டதால், அவரை மீண்  டும் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டேன். அவரை கடவுள் காப்பார் என்று நம்பு கிறேன். அவருக்கு கடவுள் அமைதியை தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் டுவீட் சக இந்திய பணியாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரபு  நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வேலை இழக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.  அரபு நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்த 35 லட்சம் பேர் உட்பட பல லட்சம் இந்தியர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும்  நிலையில், இந்தியாவில் பாஜக-வினரால் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சா ரங்கள் காரணமாக அங்கு பணியாற்றும் இந்தி யர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந் துள்ளது. ஆண்டுக்கணக்கில் அரபு நாடுகளில் வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் இவர்கள், நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் போன்றவர்களின் ஆணவம் பிடித்த  மதவெறிப் பேச்சால் மீண்டும் தங்களின் வேலை யை இழந்து நாட்டிற்கு திரும்பும் ஆபத்து உரு வாகியுள்ளது.