states

ஆலைத் தொழிலாளர் உட்கார்ந்து பணியாற்ற நடவடிக்கை!

சென்னை,ஏப்.1- தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்  துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு, சுகா தார இயக்ககத்தின் திறனாய்வு கூட்டம்  சென்னையில் நடந்தது. இதில் துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலக பாது காப்பு, சுகாதார இயக்ககத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை கிண்டியிலுள்ள வேலை வாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். அவர் கூறியதாவது:- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கூறப்பட்ட அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும். நீண்ட கால மாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்யநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு பணி யாற்ற நேரிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணி செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப் பட்டுள்ளது. ஆய்வுகளின் போது அதிகாரி கள் இதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.   நினைவுப் பரிசு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பங்கு மிக சிறப்பாக இருப்பதை பாராட்டி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.