states

தனக்குத்தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டாலும் கடும் நடவடிக்கை

மதுரை, செப்.25- மதுரையில் தென்மண் டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது: திண்டுக்கல் மாவட்டத் தில் பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வாகனங்கள் எரிக்  கப்பட்ட சம்பவத்தில் சிக்கந் தர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தென்  மாவட்டங்களில் 20 ஆயிரம்  போலீசார் பாதுகாப்புப் பணி யில் அமர்த்தப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் டிஐஜி தலைமையில் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்  களின் வீடுகள், அலுவலகங் கள், தொழில் செய்யும் இடங்  களில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுவர் மீது தேசிய பாதுகாப்பு சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இராமநாதபுரத்தில் பெட்  ரோல் குண்டு வீசப்பட்ட சம் பவத்தில் சந்தேகக்கூடிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். தென் மாவட்டத்தை பொறுத்த  வரை இரண்டு வழக்குகள்  தற்போது வரை பதிவாகி யுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாது காப்புத் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. விளம்பரத்திற் காக தனக்குத்தானே பெட் ரோல் குண்டுகளைவீசிக் கொண்டாலும் அவர்கள்  மீது கடுமையான நட வடிக்கை எடுக் கப்படும்.

;