states

img

பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணங்கள் கடும் உயர்வு

புதுதில்லி, மே 22- நாடு முழுவதும் உள்ள பொறியில் கல்லூரி களின் கட்டணங்கள் ஏஐசிடிஇயால் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் கல்வியாண்டிலிருந்து ஐந் தாண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று ஏஐசிடிஇ கூறியுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்ட ருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இதே போல், டிப்ளோமா படிப்புகளுக் கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன.  இதன்படி பாலிடெக்னிக் படிப்புகளுக் கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,64,700 வரை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது.  அதே போல் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பு களுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக் கப்பட்டுள்ளன. அதில் குறைந்தபட்சம் ரூ. 1,41,200 முதல் அதிகபட்சம் ரூ3,04,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதவீதம் அதி கரிப்பு இருக்கும். ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா சஹஸ்ரபுதே கூறுகையில், “அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்நுட்பக் கல்வியின் அனைத்து முதன்மைச் செயலாளர்கள் மற்றும்  கட் டண ஒழுங்குமுறைக் குழுக்களுக்கு நாங்  கள் கடிதம் எழுதியுள்ளோம், குழுவின் பரிந்துரைகளை அவர்களுக்குத் தெரிவித்து,  அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார். மேலும் அவர் கூறுகையில், சில கல்லூரி கள் மற்றும் சங்கங்கள் குறைந்தபட்ச கட்டண வரம்பு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நாங்கள் தில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்  பிக்க உள்ளோம், குறைந்தபட்ச கட்டண வரம்பை  இறுதி செய்துள்ளதை நீதிமன்றத் தில் தெரிவிப்போம் என்றார். ஏஐசிடிஇ தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். ஏஐசிடிஇ-யுடன் 6,500 தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதம் ஐஐடி மற்றும் ஐஐஎம்களுக்குப் பொருந்தாது.

;