சென்னை,பிப்.14- தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப் பட்டது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை ஏற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே இருக்கையை ஒதுக்கியுள்ளார் பேரவைத் தலைவர் மு.அப்பாவு. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 66 பேர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த அதிமுக அப்போது எதிர்க்கட்சி வரிசை யில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவரு மான ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். மேலும், அவருடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கமும் நீக்கப்பட்ட னர். இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் அதிமுக துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமாரை தேர்வு செய்தார். நீண்ட நாட்களாக நீடித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.