states

4 லட்சம் பாலஸ்தீனர்கள் இடம் பெயர்வு

காசா, அக்.14- காசாவில் வான்வழி தாக்குதல் நடத்திய   இஸ்ரேல் ராணுவம், தற்போது தரைவழி தாக்குதலையும் தொடுத்துள்ளது. முன்ன தாக 24 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை வெளியேறு மாறு மிரட்டி இருந்தது. இதனால் ஒரே நாளில் காசாவின் தெற்கு  நோக்கி  4 லட்சத்திற்கும் அதிகமான அப்  பாவி பாலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இது இரண்டாவது பேரழிவு (nakba) என  பாலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதரவாக திரளும் உலகம்  காசா மீது போரை அறிவித்துவிட்டு பாலஸ்தீனர்கள் மீது குண்டுகளை வீசி  கொலை செய்யும் இஸ்ரேலுக்கு எதிராக  உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக் கள் வீதிகளில் திரண்டு வருகிறார்கள். ஜோர்  டான், துருக்கி,வெனிசுலா, ஆஸ்திரேலியா,  இராக், ஜெனிவா, நெதர்லாந்து, ஸ்பெயின்  உள்ளிட்ட பல நாடுகளில் எல்லை கடந்து மக்  கள் தங்களது ஆதரவை பாலஸ்தீனர் களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளனர். 700 குழந்தைகள் கொலை  காசா மீது போர் அறிவிப்பு செய்ததில்  இருந்து தற்போது வரை 742 குழந்தைகள்  458 பெண்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதா ரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காசாவிற்கு எகிப்து உதவிக்கரம்  உணவு,குடிநீர், மின்சாரம்,மருந்துகள் என அனைத்தையும் தடை செய்து விட்டு  காசா மக்கள் மீது கொலை வெறி தாக்கு தல்களை  கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் அண்டை நாடுகளின் உதவிகளும்  காசாவிற்குள் செல்லாவிடாமல் தடுத்து வருகிறது. இந்நிலையில் எகிப்து 100 கண்  டைனர் லாரிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்  கான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.