சென்னை,டிச.1- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை (டிச.1) காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது. இது டிச. 3-இல் புயலாக மாறி டிச. 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள் ளது. இந்தப் புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டில் 5 ஆம் தேதி வரை மழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி களில் இன்று (டிச.2) முதல் 5 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த கால கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எச்சரிக்கை கூண்டு ஏற்றம் இந்த நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப் பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 9 துறைமுக ங்களில் புயல் உருவாகக்கூடிய வானி லை சூழல் உருவாகியுள்ளது என்ப தைக் குறிக்கும் 1-ம் எண் புயல் எச்ச ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும், சூறைக்காற்று வீசுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.