states

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை!

சென்னை,ஜூலை 7- ஊரக உள்ளாட்சிகளில் கிராம  சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சி களில் ஏரியா சபை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களில் கிராம சபை கூட்டங்கள் நடத்து வது போன்று நகர்ப்புற உள்ளாட்சி  வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் வார்டு சபைகள் இயங்கி வந்தன. தற் போதுள்ள கேரள இடது ஜனநாயக முன்னணி அரசிலும் இத்தகைய வார்டு சபைகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. சமீபத்தில் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மார்ச் 30, 31, ஏப்ரல் 1  ஆகிய தேதிகளில் மதுரையில் நடை பெற்ற போது, அது குறித்து தீர்மா னத்தை நிறைவேற்றி மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஏரியா சபை அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது; பாராட்டுகிறது.

மக்கள் கருத்துக்களை அறிந்து உள்ளாட்சி அமைப்புகளை செயல் படுத்த இந்த ஏரியா சபைகள் அதி காரம் கொண்டதாக சிறப்பாக செயல் படும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

சொத்து வரி உயர்வை கைவிடுக!

தற்போது தமிழக அரசு மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகி தம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் சாதா ரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் தலையில் பல மடங்கு சுமை யை ஏற்றுவதுபோல் ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வரி உயர்த்தப்படும் என்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வரி உயர்வினை மறு பரிசீலனை செய்வதோடு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பதை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.