states

img

சிபிஎம் அமைப்பு தின கிளைக் கூட்டங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதன் 60வது ஆண்டு துவக்கம் செவ்வாயன்று (அக்.31) மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கட்சி அலுவலகங்கள், கிளைகளில் கொடி யேற்றி, கட்சியின் வரலாறு, கட்சி செய்த சாதனை விளக்க நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் மாநிலம் முழு வதும் கட்சி கிளை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி பகுதியில் நடை பெற்ற கிளைக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.  தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி ஆகியோர் பங்கேற்றனர்.