states

உங்களவிட பெரிய ஊழல் வேறு யாருங்கோ! - ப.முருகன்

ஊழல் ஊழல் ஊழல் இங்கே ஊழல் யாருங்கோ?
ஊழல் ஊழல் ஊழல் இங்கே ஊழல் யாருங்கோ?
உங்கள விடப் பெரிய ஊழல் வேறு யாருங்கோ?

நயந்து பேசிக் கறப்பதுவும் ஊழல் தானுங்கோ!
மிரட்டிப் பணம் பறிப்பதுவும் ஊழல் தானுங்கோ!
ரெய்டுக்கு முன்னே வாங்குவதுவும் ஊழல் தானுங்கோ!
ரெய்டுக்குப் பின்னே பெறுவதுவும் ஊழல் தானுங்கோ! 
                         (ஊழல்)

பொதுத்துறைய வித்து வாங்கும் கமிஷன் ஊழல்ங்கோ!
துறைமுகத்தை தாரை வார்க்க வந்ததும் ஊழல்ங்கோ!
சுரங்கம் ஒதுக்க கமிஷன் வைச்சதும் ஊழல்தானுங்கோ!
விமானநிலையம் அதானிக்குப் போனதும்                                 ஊழல்தானுங்கோ!
வங்கிக்கடன் தள்ளுபடியும் அந்த வகையுங்கோ!
ஏப்பமிட்டவர கடத்திவிட்டதும் ஊழல்தானுங்கோ! 
                          (ஊழல்)

40 சத கமிஷன் பார்முலா கர்நாடக ஊழல்ங்கோ!
கங்காநதி தூய்மைத் திட்டம் காவி ஊழல்ங்கோ!
போலி ஆபீஸ் போட்டு வசூலு குஜராத் ஊழலே!
250 கோடி கிலோமீட்டர் சாலை உபி ஊழலே!
ஆயுஷ்மான்ல அடிச்சதெல்லாம் அசல் ஊழலே!
கொரோனா கால கமிஷனும் கொள்ளை ஊழலே!  
                        (ஊழல்)

பாதுகாப்பு பேரைச் சொல்லி பாரீஸ்ல ஊழலு!
ரபேல் விமான கமிஷனில ரகசியம் கசிஞ்சதே!
தேர்தல் பத்திரம் பேர்லதான் வாங்குனது ஊழலே!
5ஜி ஏலம் விட்டதுல அடிச்ச கமிஷனும் ஊழலே!
ஊழலில் எல்லாம் பெரிய ஊழல் உங்க ஊழலே!
பிஎம் கேர்ஸ் கணக்குப் பணம்தான் பிரம்மாண்ட ஊழலே! 
                        (ஊழல்)