states

25 பேர் உயிரிழப்பு; 1,700 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின

அசாம், மே 24- அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெரு க்கு தொடர்கிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.1,700 கிரா மங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பர்பெட்டா, கச்சார், தர்ராங், துப்ரி, திப்ருகார், டிமா ஹசாவ்,  கோல்பாரா, கோலாகாட், ஹைல கண்டி, ஹோஜாய், ஜோர்ஹாட், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கர்பி ஆங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச்,  ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 6,50,400க்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் மாவட்டத்தில் 3.51 லட்சத்து க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கச்சார் மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஹோஜாய் மாவட்டத்தில் 44,500 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை வரை, அசாம் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் 7.2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ​​1,709 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன மற்றும்  82,503 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.  

எட்டு மாவட்டங்களில் 656 நிவாரண முகாம்கள் மற்றும் உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 19,555 குழந்தைகள் உட்பட 90,597 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.  இராணுவம், துணை ராணுவப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை,   மாவட்ட நிர்வாகம், பயிற்சி பெற்ற  தன்னார்வலர்கள் மற்றும் தீய ணைப்பு மற்றும் அவசர சேவைப் பணி யாளர்கள் பல்வேறு வெள்ளம் பாதித்த  பகுதிகளில் இருந்து 110 பேரை மீட்டுள்ளனர். நாகோன், பர்பேட்டா, கச்சார், தர்ராங், துப்ரி, கோல்பாரா, கரீம்கஞ்ச், மோரிகான், நல்பாரி, சோனித்பூர், ஹோஜாய் மற்றும் உதல்குரி ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளது. ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 2,27,529 கோழிகள் வீட்டு வளர்ப்புப் பிராணிகள்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திராவின் கிளை நதியான கோபிலி, தரம்துல் மற்றும் கம்பூரில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. 

;