states

img

‘சிஐடியு காலத்தின் தேவை என்பது நிரூபணமாகியுள்ளது’

சிஐடியுஅகில இந்திய துணைத் தலை வர் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது:  “1970-ஆம் ஆண்டு இந்திய தொழிற் சங்க மையம் உருவானது. இது காலத் தின் தேவை” என்றார் மறைந்த தோழர் ஜோதிபாசு. அது இன்றைக்கு நிரூபண மாகியுள்ளது. ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான பி.டி.ரணதிவே, சிஐடியு “தொழிலாளி வர்க்கத்திற்கான, சமூக மாற்றத்திற்கான போராட்டத்தையும் நடத்த வேண்டும் என்றார். இந்த இரண்டு கடமைகளையும் நாம் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் மட்டுமல்ல, காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் வகுப்புவாத, பிளவுவாத பாஜக-விற்கு எதிராக சிஐடியு இயக்கம் நடத்தி வருகிறது. சமூக மாற்றத்திற் கான போராட்டத்தை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் இணைத்து நடத்த வேண்டும். தொழி லாளர் உரிமைகளுக்காகப் போராடிய வி.பி.சிந்தன், ஆர்.உமாநாத், கே.ரமணி, மைதிலி சிவராமன் ஆகியோர் வழியில் சுரண்டலற்ற சமூகத்தை அமைக்கப் போராடுவோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

;