states

மதுபானம் என்ன அத்தியாவசியப்பொருளா?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 

விருதுநகர், மார்ச் 23- விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை வட்டம்,  திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாகைக் குளம் கிராமம்.  இங்கு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி  திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் தலைமையில் அருப்புக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 21 அன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த  மண்டபத்திலேயே இரவு 10 மணி வரை போராட்டம் நீடித்தது. பின்பு, அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் நேரில் வந்து  பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் கடை யை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்த பிறகே போராட்டம் ஒத்தி வைக்  கப்பட்டது.

பொது நல மனு  

இந்தநிலையில், வாகைக்குளத்தைச் சேர்ந்த ஞானதாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,  பி.வாகைக்குளத்தில் 100-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற் பட்ட கிராமங்களில் பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  நிலையில் மேலையூர் கிராம நெடுஞ்சாலை யில் செயல்பட்டு வந்த மதுபான கடை: 11910  பி.வாகைக்குளம் கிராமத்தில் மாற்றி அமைக்  கப்பட்டது. இதனால் வெவ்வேறு சமூகத்தினரி டையே மோதல் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்  சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறு வர்கள், பெண்கள் சென்று வரக்கூடிய பாதை யாகவும் உள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றக் கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு  அளித்தும் நடவடிக்கை இல்லை.  அகற்றக் கோரி பலகட்டப் போராட்டம் நடத்தியதால்,  காவல்துறையினர் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, அந்த  மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது,  நீதிபதிகள் சுப்பிரமணி யன், புகழேந்தி அமர்வு முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில், மதுபானக்கடை உரிய  அனுமதி பெற்று செயல்படுகிறது மேலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த மது பானக் கடையும் கிடையாது என தெரிவிக் கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், 20 கிலோ மீட்டர்  தொலைவிற்கு ஒரு மதுபானக்கடை தான் உள்ளது எனக் கூற மதுபானம் பொது மக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும்,  வழக்கு குறித்து உள்துறை, கலால்  மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செய லர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருது நகர் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

சிபிஎம் தலைவர்களிடம்  ஆட்சியர் உறுதி

இந்தநிலையில், பி.வாகைக்குளம் கிரா மத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர்  ஜெயசீலனை சந்தித்து மனு அளிக்கப்பட் டது. இதையடுத்து, ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.  இதில், மாவட்டச்செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. முருகன், எஸ்.லட்சுமி, திருச்சுழி வட்ட செய லாளர் ஜி.மார்க்கண்டன் மற்றும் ஞான தாஸ், ஏஞ்சல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

;