states

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாதா? - ஐ.வி.நாகராஜன்

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் பயன்படுத்துபவர் கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதையடுத்து அதிரடி சோதனை நடத்தி கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கஞ்சா விற் பனை செய்வோர் சொத்துக்களை பறி முதல் செய்து, வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். சென்னைக்கு ஆந்திராவில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. எனவே, ஆந்திரா வழி யாக வரும் ரயில்களில் சோதனை நடத்தி கஞ்சா உட்பட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதில் பகுதி வாரியாக கஞ்சா வாங்கி விற்பவர்கள் மட்டுமே சிக்குகின்றனர். மொத்த வியாபாரிகள் சிக்குவதில்லை.

இந்நிலையில், சென்னை முகப் பேரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திலீப்குமார் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி ஒன்றரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இவ்வாறுதான் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை முற்றி லும் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் நாட்டில் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திரு வாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்ப லூர் போன்ற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா புகைப் பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் தங்களின் உபயோகத்துக்காக கஞ்சா வாங்கி வந்து, தன் தேவைக்குப் போக மீதி யுள்ள கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிலையும் தொடர்கிறது.

கஞ்சா விற்பனையைத் தடுக்கும் விதமாக ஏற்கெனவே நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படு கிறது. பலர் காவல்துறையில் ஆதா ரங்களோடு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் காவல் துறை மெத்தனமாக செயல்படுகிறது என்ற புகாரும் பொதுமக்கள் மத்தி யிலிருந்து எழுகிறது. இந்நிலையில், புதுச்சேரி பிரதே சம் காரைக்கால் மாவட்டத்தில் அண் மைக் காலமாக கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக காவல் துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன. தற் போதைய காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க தீவிர நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், அவர் தெரிவித்துள்ள ஊடக செய்தி யில் கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா விற்பனை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதே போல, தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் விற்பனை தொ டர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். ஆனாலும், இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

நாகை, திருவாரூர் மாவட்டங்க ளில் 2021 மற்றும் 2022-ல் 195-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2503 கிலோ கஞ்சா பொருட்கள் கைப் பற்றப்பட்டதாகவும்  தெரிய வரு கிறது. தஞ்சை, மயிலாடுதுறை, அரிய லூர், பெரம்பலூர் போன்ற மாவ ட்டங்களில் இதே அளவுதான் வழக்கு களும், கைது நடவடிக்கைகளும் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதும் இருக்கலாம் என்று நம்மால் யூகித்துக்கொள்ள முடி கின்றது.  அண்மைக் காலமாக காரைக் காலைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்க ளிலும் இளைஞர்கள் கஞ்சா, புகை யிலை உள்ளிட்ட போதைப் பழக்கக் துக்கு அடிமையாகும் போக்கு பர வலாக அதிகரித்து வருவது கண்கூடா கத் தெரிய வருகிறது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இப்போக்கை அனுமதிக் கக்கூடாது. கல்வி நிலையங்களுக்கு அருகில்கூட போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்கப்படுகின்றன. கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அதேநேரத்தில், இதுகுறித்த விழிப்பு ணர்வையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அரசியல் தலையீடு, பெயரள வுக்கான வழக்குப்பதிவு உள்ளிட்ட காரணங்களால் கஞ்சா விற்பனையா ளர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர். எனவே,  காவல் துறையின் நடவடிக் கையை இன்னும் தீவிரப்படுத்திட வேண்டும். குறிப்பாக எங்கிருந்து கஞ்சா வருகிறது? இதன் பின்னணி யில் யார் உள்ளனர் என்பன குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்த வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேலான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப் படும்போதுதான், ஜாமீனில் வெளி வர முடியாத தண்டனை அளிக்கப் படுகிறது. மாறாக, குறைந்த அளவு கஞ்சாவுடன் கைது செய்யப்படுவோர் எளிதாக ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடு படுகின்றனர். இதனால், பல நேரங்க ளில் போலீசாரின் கைது நடவடிக்கை பயனளிக்காமல் போய்விடு கிறது. 

புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட் கள் விற்பனையை கண்காணித்து தடுக்கவும் காவல் துறையில் தனித் தனிப் பிரிவுகள் செயல்படுகின்றன. அதேபோல, தமிழ்நாட்டிலும் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கஞ்சா புழக்கத்தை தடுத்து நிறுத்தி இளைஞர் மாண வர்களின் எதிர்காலத்தை பாது காத்திட முடியும்.

கட்டுரையாளர் : சிபிஎம் 
தமிழ்மாநிலக்குழு உறுப்பினர்

;