states

கருணை அடிப்படையிலான பணியிலும் கை வைத்தது ஒன்றிய பாஜக அரசு!

புதுதில்லி, ஜூலை 13 - பணியில் இருக்கும்போது உயிரி ழக்கும் ஒன்றிய அரசுப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்ப டையில் பணி வழங்குவதற்கான விதி களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இதுதொடா்பாக உள்துறை அமைச்ச கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “ஒன்றிய அரசுப் பணியாளரின் திடீா் உயிரிழப்பாலோ, மருத்துவக் காரணங் களால் ஓய்வு பெறுவதாலோ அவரைச் சார்ந்திருக்கும் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கருணை அடிப்படையில் குடும்ப உறுப் பினருக்குப் பணி வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், கருணை அடிப்படை யில் பணியாளா்களை நியமிப்பதற்கான விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது-

இந்த திருத்தங்கள், நிர்வா கத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத் தும். மேலும், கருணை அடிப்படையில் பணி யாளா்களை நியமிப்பதற்கான நோக்கம் முழுமையாக வெற்றியடையும். புதிய விதிகளின்படி, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கு வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட குடும்பத் தில் உள்ள உறுப்பினா்களின் எண்ணி க்கை, அவா்களது வயது, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை, குடும்பத்தில் உள்ள ஊதியம் ஈட்டுவோரின் விவரங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஆராய்வதற்கென உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்குப் பணி வழங்குவது தொடா்பாக முடிவெடுக்கப்படும். ஆய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவ ரங்கள் பொதுவெளியில்வெளியிடப்படும். கருணை அடிப்படையில் பணி நிய மனம் பெறும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு உதவுவதற்காகவும் தனி அதிகாரி நியமிக்கப்படுவார். கருணை அடிப்படையில் பணி கோரி விண்ணப் பிக்கும் நபருக்கு ஆரம்ப நிலையிலேயே அனைத்து விவரங்களும் விரிவாக அளிக்கப்படும்.”  இவ்வாறு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒன்றிய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் விதிகள் திருத்தப்பட்டுள்ள தாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.