states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விஜயதாரணிக்கு “டாடா” காட்டிய பாஜக

தமிழகத்தில் 39 நாடா ளுமன்ற தொகுதி களுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தொகு தியில்,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு ஐந்து முறை வெற்றி பெற்றது. இதில் கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொட ர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பா.ஜனதா கட்சியில்  கரைந்து விட்டார். இதையடுத்து சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அத னால் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது. விளவங்கோடு தொகுதிக்கு ராணி என்பவரை வேட்பாளராக அதிமுக அறி வித்துள்ளது. மூன்று முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை  பா.ஜனதா சார்பில் போட்டியிடு வார் என்று எதிர்பார்க்கப்பட் டது. காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக பாஜக-விற்கு தாவினார். தற்போது  விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி போட்டியிடுவார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோடிகளைக் கொட்டிய வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் பா.ஜ.க.வுக்கு 2019 முதல் 2023 வரை ரூ. 226.65 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் லஞ்சம் தந்துள்ளது.  2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்து க்குடியில் நடந்த போராட்டத்தில் 13 பேர் காக்கை குருவிகள் போல சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடை ந்தனர். அதற்கு பின்னர்தான் பா.ஜ.க. இவ்வளவு பெரிய தொகையை “லஞ்சம்” பெற்றுள்ளது.  ராஜஸ்தான்/ ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் வேதா ந்தா குழுமத்தின் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட பல சலுகைகள் வேதாந்தாவுக்கு தரப்பட்டன. தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த ஒரு நிறு வனத்திடம் கோடிக்கணக்கான ரூபாயை பெறுவதற்கு பா.ஜ.க. கொஞ்சம் கூட கூச்சப்படவே இல்லை. ஆனால் பிரதமர் மோடி உட்பட பல பா.ஜ.க. தலைவர்கள் தமிழ் நாட்டு மக்கள் மீது அன்பு பொழிவது போல நடிக்கின்றனர்.  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தொடர்ந்து வேதாந்தா குழுமம் முனைப்புடன் செயல்படு கிறது. ரூ.226.65 கோடி லஞ்சம் பெற்று பல பகுதிகளில் சுற்றுச்சூழல் சலுகை அளித்த மோடி அரசு ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் என்ன நிலை எடுத்திருக்கும் என்பதை ஊகிக்க தேவை இல்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பா.ஜ.க.வின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானவை!

திமுக கூட்டணிக்கு ஆதரவு

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் - அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.    யாதவ மக்கள் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு. ராஜாராம், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஆதித் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு. ஜக்கையன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவையின் நிறுவனத் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத் தலைவர் பொன். முருகேசன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்  தரகர்கள் சங்கத் தலைவர் விருகை வி.என். கண்ணன், திராவிடத் தமிழர்  கட்சியின் தலைமை நிலையச் செய லாளர் பேரறிவாளன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப் பூர் அல்தாப் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.