states

பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை

சென்னை, ஜூன் 1- சமூகவலைத் தளங்களில் விமர்சனம் செய்வதுடன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து பாஜகவினரை கண்டித்து அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகை யிட்ட சமூக ஆர்வலர் நந்தினியும் அவரது சகோதரியும் கைது செய்யப் பட்டனர். மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சனைகளுக்காகவும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்க ளையும் வெளியிட்டு வருகிறார். பிரதமர் மோடியின் நண்பர்க ளுக்காக வராக்கடன்களை தள்ளுபடி  செய்ததுடன், அதானியின் நிறுவனங் களுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசையும் கண்டித்து பாஜக அலுவலகத்தின் முன்பாக போராட்டத்திலும் ஏற்கெனவே நந்தினி ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் சமூகவலை தளத்தில் தன்னை பாஜகவினர் விமர்சிப்பதாகவும், மிரட்டல் விடுப்ப தாகவும் நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்க ளிலும், பொது மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவினர் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி, இருவரும் வியாழனன்று (ஜூன் 1) பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டனர். அப்போது பாது காப்பு பணியில் இருந்த காவலர்கள்,  நந்தினி மற்றும் அவரது சகோத ரியை தடுத்து நிறுத்தினர். பாஜகவி னர் பெண்களுக்கு எதிராக செயல் பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி னார். நந்தினியின் போராட்டம் காரண மாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

;