states

img

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை - பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம், நவ. 7- நாட்டில் வங்கிகளை கொள்ளை யடித்து வெளிநாடுகளுக்கு சென்ற வர்களை பிடிக்க எந்த சட்ட அம லாக்கத்துறையும் புறப்படவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மாநில கூட்டுறவு ஒன்றியம் நடத்திய கூட்டுறவு பாதுகாப்பு மகா சங்க மத்தை திங்களன்று (நவ.6) துவக்கி வைத்து முதல்வர் பேசினார்.  அப்போது அவர், வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களில் 15 சதவிகிதம் பேர் சங் பரிவாருக்கு நிதி யளிக்கும் தொழிலதிபர்கள். ஒரு  கேள்வி கூட அவர்களுக்கு எதிராக எழு வதில்லை. அமலாக்க இயக்குநரகம் கேரளாவிற்கு வந்ததின் தீங்கிழைக்கும் நோக்கம் அனைவருக்கும் தெரியும். அமலாக்க இயக்குநரகம் என்பது ஒரு புலனாய்வு நிறுவனமாகும், இது  நாட்டின் உச்சநீதிமன்றத்திடம் இருந்தும் விமர்சனத்தைப் பெற்றுள் ளது. கேரளாவுக்கு வந்த பிறகும் அவர்கள் சிறப்பாக எதையும் காண வில்லை. ஆனால், ஒட்டுமொத்த கூட்டு றவுத் துறையிலும் நடக்கக் கூடாத வற்றைப் பரப்புவதே நோக்கமாக இருந்தது. மாநில கூட்டுறவுத் துறை யை ஊனப்படுத்தும் நடவடிக்கைகள் எதையும் ஏற்க முடியாது. கேரளத்தில் உள்ள கூட்டுறவு துறை நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது. உலக மயமாக்கலுக்குப் பிந்தைய ஆணையங்கள் கூட்டுறவுத் துறைக்கு பேரழிவு தரும் திட்டங்களை முன்வைத்துள்ளன.  இந்த திட்டங் களை, இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து எதிர்த்தன. எனவே கூட்டு றவுத் துறையைப் பாதுகாக்க தொட ர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் பேசுகையில், கூட்டுறவுத் துறை  என்பது மேசையில் இருக்கும் கண்ணாடிக் கிண்ணம். அதனை என்றும்  யாருடைய கையாலும் உடைக்க இட மளிக்கக் கூடாது என்றும், கூட்டுறவுத் துறையைக் காக்க ஒன்றாக நிற்போம் என்றும் கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தலைமை வகித்தார்.